அஜீத் பட பிரஸ்மீட்டில் விஜய் படம் பற்றி கேள்வி…! ஒரு குபீர் குழப்பம்!

பொங்கலுக்கு திரைக்கு வருவதற்கான அத்தனை முஸ்தீபுகளுடனும் தயாராகிவிட்டது வீரம். வரப்போகிற கடைசி நேரத்திலாவது படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமே? பிரஸ்சை மீட் பண்ணினார்கள் இன்று.

வந்தவர்கள் லிஸ்ட்டை விட வராதவர்கள் லிஸ்ட்தான் ரொம்ப முக்கியமானது. அதில் அஜீத்தும் இல்லை. தமன்னாவும் இல்லை. அஜீத்தை விட்ருங்க. அது அவரோட பாலிஸி. ஏன்… இந்த தமன்னாவாது வந்திருக்கலாமே?’ என்று பெரும் வருத்தத்தோடு கேட்டு கேட்டு மாய்ந்தார்கள் நிருபர்கள். இல்லே… இது ஒன்லி டெக்னீஷியன்களின் சந்திப்புதான். அவங்க நிச்சயம் உங்களை சந்திப்பாங்க என்று அடுத்த மேட்டருக்கு தாவினார் டைரக்டர் சிவா.

ட்ரெய்லர்ல முரட்டுக்காளை சாயல் இருக்கே, இது அந்த கதையை தழுவிய படமா? என்ற தொடர் கேள்விக்கு துண்டு போட்டு தாண்டாத குறையாக பதிலளித்தார் அவர். ‘இல்லைங்க. அது வேற கதை. இது வேற கதை. இரண்டும் ஒன்று அல்ல. இந்த படத்தில் அஜீத் சாரை நீங்க வேற மாதிரி பார்ப்பீங்க’, என்றவரிடம் ‘ஏன் அஜீத் சார் தொடர்ந்து சால்ட் பெப்பர் லுக்குலேயே வர்றாரு?’ என்று இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. ‘இந்த கதையில் வர்ற அவரோட கேரக்டருக்கு அது பொருத்தமா இருந்ததால் அப்படியே விட்டுட்டோம்’ என்றார் சிவா.

ஸ்டண்ட் காட்சிகள் பற்றி பைட் மாஸ்டர் சில்வியா பேசும்போது, நான் வொர்க் பண்ணிய படங்களிலேயே இதுதான் ரொம்ப திருப்தியான படம் என்று சொல்ல, அதை தொடர்ந்து வந்த கேள்வி கொஞ்சம் ரிஸ்க்கானது. அப்படின்னா விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கும் நீங்கதான் ஸ்டன்ட் மாஸ்டர். அந்த படத்தையும் சேர்த்துதான் சொல்றீங்களா என்று கேட்கப்பட, அதிர்ந்தே போனார் அவர். சார்… நான் இந்த படம் ரொம்ப திருப்தியா இருந்ததுன்னுதான் சொன்னேன். அந்த படத்தை பற்றி சொல்ல வரலே என்றார். அப்படியே அஜீத்தின் பைட் காட்சி ரிஸ்க் பற்றியும் நிறையவே பேசினார்.

நாங்க ட்ரெய்ன் பைட் எடுக்கும்போது அஜீத் சார் ரொம்ப இன்வால்வ்மென்ட்டோட நடிச்சார். சில காட்சிகளில் நாங்க டூப் போட்டுக்குறோம். ரிஸ்க் வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டார். என்னை போலவேதானே இன்னொருத்தரும். அவருக்கு மட்டும் அது ரிஸ்க் இல்லையா? அதனால் நானே பண்றேன்னு அந்த ரிஸ்கான காட்சிகளில் நடிச்சார். எப்பவுமே அவர் கிரேட் என்றார் சில்வியா.

Veeram Tech. team met the press

Veeram technical team pre-release press meet was held today (2nd Jan. 2014). While Ajith was absent as usual, the lead lady Tamannah did not attend the meet. When asked about her absence the director Siva said the meet was only about the technicians and she would certainly meet the press, he confessed.

When asked about the similarity seen with Murattu Kalai, Siva responded saying that the film is his original script and does not have relevance to either Murattu Kalai or Malayalam film which was released in 2000. When the film is seen people will agree with me, he said. He also said that it was Ajith’s suggestion to go in for rural commercial film and he has penned the script accordingly. Since the ‘salt and pepper’ look matched with the character Ajith portrays in the film, he decided to retain the same look for Ajith, he noted.

Speaking at the event the stunt master Sylivia said that Veeram was much satisfying film amongst the films he had worked. When asked about Vijay’s Jilla for which too he was the stunt master, Sylvia, after initial shock managed to say that he only said that his work in the film was very satisfying. He also narrated how Ajith took risks while doing the stunt scenes personally himself. When asked to use body double in risky shots, Ajith had countered when his body double take the risk, why can’t he? He is always a great star to work with, he concluded.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹன்சிகாவை தேடி அமெரிக்காவுக்கு பறந்தார் சிம்பு

காதல், சந்திரயானில் ஏறி செவ்வாய் கிரகத்திற்கு கூட போக வைக்கும் வல்லமையுடையது. யார் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களோ, இல்லையோ? சிம்பு நன்றாக உணர்ந்தவர். விண்ணை தாண்டி வருவாயா...

Close