அஜீத் வீட்டிற்கு ஷாருக்கான் அனுப்பி வைத்த ஆள் ?

உடலை ஃபிட்டாக வைத்திருக்கிற விஷயத்தில் வடக்கேயிருக்கும் நடிகர்களுக்கு இருக்கிற அக்கறை தெற்கே இருப்பவர்களுக்கு கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அவ்வப்போது பேராடி சிக்ஸ் பேக், செவன் பேக் என்று முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஷாருக்கான், சல்மான்கான், வரிசையில் நாமும் இருக்க வேண்டும் என்கிற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நமது தமிழ் நடிகர்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இங்கேயே ட்ரெய்னர்களை வைத்துக் கொண்டிருக்கும் பலர், இப்போது சம்பந்தப்பட்ட கான்களுக்கு கற்றுக் கொடுக்கிற ஆட்களையே நமக்கும் பயிற்சி தர கேட்டாலென்ன என்று ஆசைப்படுகிறார்கள்.

அப்படியொரு ஆசை அஜீத்திற்கும் வர, ஷாருக்கானின் உடற் பயிற்சியாளர் இப்போது அஜீத் வீட்டிற்கே வந்து தங்கிவிட்டாராம். வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கும் அஜீத் இப்போது படு தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் துக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வந்தவருக்கு, ஷாருக்கே அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்த நபர்தான் இந்த பயிற்சியாளர்.

கவுதம் மேனன் படத்தில் அஜீத் வந்து ‘பாடி’ காட்டும்போது, மிரளதான் போகிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னாள் இன்னாள் சிக்ஸ் பேக்கு ஜிக்குசான்கள்!

Shah Rukh Khan’s trainer for Ajith!

It is already reported widely in every media platform that Ajith is undergoing strenuous training to bring his body in shape – slim and trim. Who else would be better to give Ajith the tips do get his body in shape other than Shah Rukh Khan who is ruling the roost in Bollywood.

We hear that Ajith is undergoing proper training under professional trainer at his gym. We also heard that some time back he had been to Kerala to undergo Ayurvedic therapy for his body to have some temporary relief from his body injuries. Apart from Ayurvedic he also underwent some swimming exercises in Kerala.

Shah Rukh Khan seems to have personally suggested a trainer for Ajith and had sent him to his home. The trainer is staying at Ajith’s place and give him all necessary inputs to make his body in shape for six or eight packs as is required by the director.

So we can get to see Ajith in a different rook and posture in his upcoming film directed by Gautham Menon.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல் படத்தில் ரஜினி? கல்லாவை நிரப்ப புது திட்டம்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? கமலும் ரஜினியும் சேர்ந்து நடிப்பார்களா? ஷகிலாவும் மம்முட்டியும் சேர்ந்து சேர்ந்து நடிப்பார்களா? என்று ஓராயிரம் கேள்விகளை மனதில் போட்டு உழப்பிக் கொண்டேயிருக்கிறான்...

Close