அஜீத்- ஹுசைனி ? உருவாகும் புதிய கூட்டணி

நவீன போதி தர்மர் என்றால் அது நம்ம கராத்தே ஹுசைனிதான். இந்தியாவிலிருந்து வர்மக்கலையை சீனாவுக்கு கொண்டு சென்றவர் போதிதர்மர். இந்த வரலாறு நமக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மூலமாகதான் தெரிய வந்தது. நமக்கு தெரிந்தே ஒரு வரலாறு உண்டென்றால் அது ஹுசைனிதான். இன்று தெருவுக்கு தெரு கராத்தே பள்ளிகள் பெருகுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் நமது ஹூசைனி. தமிழகம் முழுவதும் இருக்கிற கராத்தே மாஸ்டர்கள் பலரும் இவரது சிஷ்யர்கள்தான். கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக கராத்தே கலையை தமிழகத்தில் பரப்பி வரும் இவரை சினிமாவிலும் பார்த்து வந்தோம். ஆனால் நடுவில் என்ன நினைத்தாரோ, தேடி வந்த பல வாய்ப்புகளை உதறி தள்ளினார் அவர்.

எப்படியோ அவரை மீண்டும் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்கள் அஜீத்தும், கவுதம் மேனனும். இவர்கள் இணையும் புதிய படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம் ஹுசைனி. முதலில் கவுதம் மேனன் இவரிடம் கேட்டபோது, நான் வில்லன் ரோலில் நடிப்பதாக இல்லை என்றாராம். அதற்கும் காரணமுண்டு. ஒரு படத்தில் இவர் சிங்களவராக நடித்திருந்தார். அதற்கப்புறம் இவரை சிங்களர் என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். அதனால் சினிமாவில் நடித்தாலும், நெகட்டிவ் ரோல் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாராம் அவர்.

பின்பு கதையில் வரும் ஹுசைனியின் கேரக்டரை விவரித்தாராம் கவுதம். அதற்கப்புறம்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் ஹுசைனி. இவர் நினைத்தது போலவே நல்ல ரோல் அமைந்துவிட்டால், திருட்டு விசிடி காரர்களின் முதுக்குக்கு ஐயோடெக்ஸ் தயாராக இருக்கு என்று நம்பலாம்.

Martial Arts exponent Hussaini to join hands with Ajith?

Hussaini who is still regarded as an expert in martial arts in Tamil Nadu is likely to team up with Ajith, if sources are to be believed. Hussaini is popular amongst younger generation with his Karate schools being run in different parts of Chennai through his disciples. Though there were offers knocking him to do roles in Kollywood, he has refrained from taking any roles. Also he seems to have taken the decision not to don negative roles in films, as it may spoil his image and reputation, even if he chooses to do any film.

Recently director Gautham Menon approached Hussaini to do an important role in the film he is directing with Ajith playing the lead. Hussaini refused Gautham’s offer and told him about his policy of not taking up any negative role. After Gautham narrated his role Hussaini seems to have agreed to do the role.

Fans can have the double treat of watching Ajith and Hussaini together in the film!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பா.ம.க பக்கம் பார்வையை திருப்பிய விஜய்? -அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது அடுத்த படம். அதற்கடுத்த படம் என்று வரிசையாக பிளான் போட்டுக்...

Close