அஜீத் ஹெல்மெட்டை கழற்ற வேண்டிய நேரமிது!

அஜீத் படம் என்றால் அஜீத்திற்குதான் பிசினஸ். விஜய் படம் என்றால் விஜய்க்குதான் பிசினஸ். ரசிகர்களும் இவர்களின் முகத்திற்காகதான் உள்ளே வருகிறார்கள். இந்த பொத்தாம் பொதுவான ஃபார்முலா புரியாதவர்கள்தான் இவர்களுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளை தேடி ஓடுகிறார்கள். தமிழில் பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்பதற்காக அந்த படம் ஓடுச்சுன்னு சொல்ல முடியுமா? அப்புறம் ஏன்தான் பிரியங்கா சோப்ராவையும் தீபிகா படுகோனைவையும் தேடி தேடி ஓடுகிறார்களோ…? வௌங்கிரும்டா தமிழ்சினிமா என்று சர்வ பெரிய எரிச்சலோடு சந்தியில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தின் முக்கியமான சினிமா மீடியேட்டர்கள்.

அவங்க சொல்றதிலேயும் தப்பில்லையே? என்னாச்சு என்று விசாரித்தால் கவுதம் மேனன் படத்தில் அஜீத் ஹீரோவாக நடிக்கிறார் இல்லையா? அந்த படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க கடந்த சில வாரங்களாக தீபிகா படுகோனேவை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஸ்ரீதர் ராகவன், இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கில் துணையாக இருக்கிறாராம். அவர்தான், ‘நான் சொன்னா தீபிகா கேட்பாங்க. ட்ரை பண்ணட்டுமா?’ என்றாராம் கவுதமிடம்.

ஒரு பிரபல நடிகையின் கால்ஷீட் கிடைக்குமா என்று ட்ரை பண்ணுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த நடிகை வாங்கும் சம்பளம், தயாரிப்பாளருக்கு சங்கு ஊதிவிடக் கூடாதல்லவா? கிட்டதட்ட ஏழு கோடி சம்பளம் கேட்கிறாராம் தீபிகா. பாலிவுட் படங்களுக்கென்று பெரிய அளவில் வசூல் வழிகள் இருக்கின்றன. உலக அளவில் மார்க்கெட்டும் இருக்கிறது. எனவே இந்த சம்பளம் இந்தி படங்களுக்கு சரி. ஆனால் தமிழ் படங்களுக்கு சரி வருமா?

சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’ ஹிட் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்க, ஒரு குறைதீர்ப்பு கூட்டமே நடத்துகிற அளவுக்கு புகார் பட்டியலோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள் அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள். அதுவே அந்த லட்சணம் என்றால், தீபிகாவுக்கு ஏழு கோடியை கொடுத்து அதை வசூலிக்க, எந்தெந்த வழிகளிலெல்லாம் விழுந்து புரள வேண்டியிருக்குமோ?

அஜீத் ஹெல்மெட்டை கழற்ற வேண்டிய நேரமிது!

Time for Ajith to have the say!

There is a craze amongst the film makers of Kollywood to rope in popular heroines from Bollywood and star with our leading heroes. This is an illusion that because of these heroines, the film will become a hit and make profit. While most of the producers get attracted to this false image, there are producers who make right decision to be circumspect with the requirements for making the film. However, these producers are far and few.

It is heard that Deepika Padukone is being considered for casting opposite to Ajith in the untitled film directed by Gautham Menon. Sreedhar Raghavan who has been roped in to write the screen play for the film seems to have hinted the director that he would speak to the actress and get her on board. But the point here is the salary and other expenses of these so called Bollywood glamour stars would be minimum Rs.7 crores and which would obviously add extra burden on the producers which ultimately end up in cat fights over the profit or loss the film has made. Is this scenario necessary instead of a congenial atmosphere amongst the producers, distributors and theatre owners?

The latest example is Ajith’s Veeram which was said to be a super hit but there are murmurs of disagreement amongst the distributors and theatre owners about the profit it made.

Ajith being a reasonable person and with good heart should ponder over this matter, and have a firm say on this issue!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
NEDUNJALAI STILLS

[nggallery id=345]

Close