அஞ்சலியை செருப்பால் அடிப்பது அவ்வளவு ஈஸியா?

நடிகை அஞ்சலி தமிழகத்தை விட்டு ஓடிய பின்பு அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு பெரிய கூட்டம். கடை திறப்பு விழா, காது குத்து விழா என்று இவரை அழைத்துப் போய் அதில் குறிப்பிட்ட கமிஷன் வாங்கி பிழைத்து கொண்டிருந்த சிலரும், இந்த கதைக்கு அஞ்சலிதான் பொருத்தம். அவரை விட்டா ஆளே இல்ல என்று தங்கள் கதையை அஞ்சலியிடம் சொல்லி அப்ரூவல் வாங்க துடித்த உதவி இயக்குனர்கள் சிலரும், இந்த கூட்டத்தில் அடக்கம்.

ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வரும் மு.களஞ்சியமும் இந்த கூட்டத்தில் ஒருவர் என்பதுதான் வேதனை. ஒரு காலத்தில் அஞ்சலியை அறிமுகப்படுத்தி, அவருக்கு அ-னா ஆவன்னா சொல்லிக் கொடுத்தவரும் இவர்தான்.

வலியுடன் ஒரு காதல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் மு.களஞ்சியம் இங்கு சினிமாவுக்குன்னு பல அமைப்புகள் இருக்கு. ஆனால் யாருமே என் படத்தை பாதியில் விட்டுட்டு ஓடிய அஞ்சலியை அழைத்து விசாரிக்கவே இல்லை என்று வேதனைப்பட்டார். அதே விழாவில் இவரை தொடர்ந்து பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அஞ்சலியை இன்னும் ரெண்டு மூணு நாள்ல எங்கயிருந்தாலும் கொண்டு வந்து சேர்க்கிற வேலையை எங்க கில்டு அமைப்பு பார்த்துக்கும் என்றார் ஆவேசமாக. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.

அஞ்சலி மாதிரி நடிகைகளை செருப்பால் அடிக்கணும் என்று பேச, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும் இதுதான் கொட்டை எழுத்து நியூஸ். சரி, இதெல்லாம் அஞ்சலியின் காதுகளுக்கு போகாமல் இருந்திருக்குமா? இந்த கேள்வி நமக்கு எழ, காதுகளை இன்ட்ஸ்ட்ரியில் மேய விட்டோம்.

செய்தி தாள்களில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதால் சம்பந்தப்பட்ட நியூஸ் அஞ்சலிக்கு ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கப்பட்டதாம். அவற்றையெல்லாம் பார்த்தவர், தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இப்போதும் இருக்கும் டைரக்டர் சுந்தர்சியை தொடர்பு கொண்டாராம். இந்த பிரச்சனையை நீங்கதான் பேசி தீர்க்கணும் என்று கேட்டுக் கொண்டாராம். அதாவது ஊர் சுற்றி புராணம் படத்திற்கு ஏதாவது நஷ்டஈடு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்பதுதான் அவரது திட்டம் என்கிறார்கள்.

சுந்தர்சி இந்த தலைவலியை தன் தலையில் ஏற்றிக் கொள்வாரா, அல்லது அஞ்சலி பிரச்சனைக்கு ஒரு அஞ்சலி செலுத்தி விட்டு ஒதுங்கிக்கொள்வாரா என்பதை இன்னும் சில வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பின்குறிப்பு- விழாவில் செருப்படி பேச்சை பேசிய ஸ்டன்ட் மாஸ்டர் மீது வழக்கு தொடர முடியுமா என்பது குறித்தும் ஆலோசனைகள் நடக்கிறதாம். நடக்கட்டும்… நடக்கட்டும்…

Can Anjali resolve the issues surrounding her?

Anjali one of the talented actresses has been in the news for all wrong reasons. Though we are not here to take a stand on those issues, it is pertinent to point out that people involved in it, are not interested to settle the matter, at least it can be seen from the speeches made during the audio launch of Valiyudan Oru Kadhal. Director M Kalanjiyam one of the directors who introduced Anjali to Tamil filmdom, had expressed his concern in his speech saying that despite the existence of several official bodies in Tamil film industry, none of them had shown any interest to resolve the issue. It is a genuine feeling expressed at the immediate opportunity available to Kalanjiyam. However speaker after speaker who spoke after Kalanjiyam were abusive of the actress, especially the stunt director Jagguar Thangam who thundered that actresses of Anjali tribe should be slapped with chapels, which is not only distasteful but inviting for more trouble. Also it is not a forum to make such speeches, at all.

The hard hit speeches were relayed obligingly to Anjali, who is said to have contacted director Sundar C, to settle the issue amicably. How far Sundar C would decide to play the role of tribunal can be answered only by him. We have also learnt from the reliable sources that the actress is ready and willing to pay compensation for the director Kalanjiyam to cover his loss on the incomplete film he made with Anjali. It is also said that Anjali is also planning to take legal recourse against those who have abused her during the audio launch event.

Anjali appears to be focussed this time to settle the issues surrounding her with Kalanjiyam, in the interest of her career. But how far will she be able to succeed, only time will say!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘யாராயிருந்தாலும் டோண்ட் டச் ’ எம்.பி யிடம் கடிந்து கொண்ட நடிகை

‘யாராயிருந்தாலும் டோண்ட் டச் ’ என்று ஆவேசமாக கூறிய ஒரு நடிகையை பற்றிதான் கேரளாவிலும் டெல்லியிலும் ஒரே மூச்சு பேச்சு. நடிகை கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரளாவில்...

Close