அஞ்சலி அங்கேயே செட்டில் ஆகிட்டாராம்…
அஞ்சலியை பற்றி இன்று பிரபல வார இதழில் வந்திருக்கும் ஒரு செய்தி இன்டஸ்ட்ரியை கலங்கடித்திருக்கிறது. அவர் ஆந்திராவில் பிஸியாக இருக்கிறார், நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அவரை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி நெருப்பை கவிழ்த்தது போலிருந்திருக்கும். உண்மையில் அஞ்சலி
யின் இன்றைய நிலைமை என்னவாக இருக்கிறது? இந்த கேள்வியை தாங்கியபடி பலரும் துப்பறியும் சாம்புவாகி திரிந்து கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால் இவரது முன்னாள் மேனேஜர்களே தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறாராம் அஞ்சலி. பிரபல மதுரை அரசியல்வாதி ஒருவரின் மருமகனைதான் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டார் அஞ்சலி என்றும், அவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் வந்த செய்தியில் பாதிக்கு மேல் உண்மை இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள் இந்த துப்பறியும் புலிகள். ஒரு வேளை தமிழ்நாட்டில் ஆட்சி மாறினால் அஞ்சலியின் கதி என்னாகும் என்பதை பற்றியும் அலசுகிறார்கள். அந்தளவுக்கு இவர் விஷயத்தில் தொலைநோக்கு பார்வை செலுத்துகிறது வம்பளப்பவர்களின் வாய்.
@present anjali ware