‘அஞ்சான் ’ படப்பிடிப்பில் ‘நாம் தமிழர் ’ ஆர்ப்பாட்டம்? தியேட்டரிலிருந்து ‘இனம் ’ வாபஸ்…

சந்தோஷ் சிவன் இயக்கிய ‘இனம்’ படத்தை லிங்குசாமி வாங்கி வெளியிட்டாரல்லவா? அந்த படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக உடனடியாக படத்தை திரையரங்குகளில் இருந்து வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார் அவர். யார் யாரோ சொல்லியும் கேட்காமல் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டதாக அறிவித்து தொடர்ந்து படத்தை ஓட வைக்க முயற்சி செய்த லிங்குசாமி, திடீரென வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன? விசாரித்தால்தான் தெரிகிறது., சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படப்பிடிப்புக்கு இந்த ‘இனம்’ பிரச்சனை இடையூறாக இருக்கிறதாம்.

இன்று மும்பையில் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கு திரண்டு வந்த ‘நாம் தமிழர்’ கட்சியின் உறுப்பினர்கள் லிங்குசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு இடையூறு விளைவித்தார்களாம். இதையடுத்து ‘இனம்’ படத்தை தலைமுழுகிவிடுவதுதான் நல்ல முடிவாக இருக்கும் என்று நினைத்தாராம் அவர். நாளையிலிருந்து எந்த தியேட்டர்களிலும் இனம் இருக்காது என்பதை அவரே அறிவித்திருக்கிறார்.

எதிர்காலத்தில் சந்து வழியாக நுழையும் சந்தோஷ்சிவன் போன்ற படைப்புலக சந்தர்பவாதிகளுக்கு ‘இனம்’ பெரிய பாடமாக இருக்கும்.

இதுதான் லிங்குசாமியின் அறிக்கை-

Lingusamy withdraws Inam from theatres!

Lingusamy’s Thiruppathi Bros who have distributed Inam directed by cinematographer turned director Santosh Sivan has given in a statement that the film will be withdrawn from the theatres with immediate effect.

Santosh Sivan’s Inam was facing flak from ‘Naam Thamizhar’ political party in Tamil Nadu. Unmoved by the announcement by the distributor Lingusamy that five controversial scenes have been deleted from the film in deference to the wishes of the protestors, the protestors continued their agitation against the film. The protests of Naam Thamizhar spilled over to the shooting spot of Anjaan disrupting the shooting of Anjaan which Lingusamy is directing with Suriya playing the lead.

Fearing disruption in shooting of Anjaan will cause huge loss, he immediately hurried to announce that he would withdraw Inam from theatres effective from 31st March. He has said in his statement that he has taken the decision considering that the continued protests will vitiate the political atmosphere in view of the elections.

1 Comment
  1. hasan says

    all tha tamils are idiots including you. Raed your last sentence in Tamil. I lost respect on you

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று!

தமிழ்சினிமா என்ற ஜீரா டப்பிக்குள் இன்னும் எத்தனை குளோப் ஜாமூன்களைதான் கொட்டுவார்களோ? நயன்தாரா, அசின், லட்சுமிமேனன், நஸ்ரியா என்று கொட்டிக்கிடக்கும் இனிப்பு ஜீராவுக்குள் இன்னொன்றாக விழுந்திருக்கிறார் ஆராத்யா....

Close