அடப்பாவி டைரக்டரே… அடுக்குமாய்யா இதெல்லாம்?
அடப்பாவி டைரக்டரே… அடுக்குமாய்யா இதெல்லாம்?
விஷயம் பெரிசு. அதனால்தான் இப்படியொரு தலைப்பு. விஷயம் மட்டுமல்ல, விஷயத்தில் ஈடுபட்டவர்களும் ‘பெரிசுகள்’தான். ‘என் நெஞ்சை தொட்டாயே’ என்றொரு படம் கோடம்பாக்கத்தில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது. ஆர்.கே.அன்புச்செல்வன் இயக்கி வரும் இப்படத்தில் ஒரு காட்சி. இதற்காக அஞ்சாறு கிழவிகள் வேணும்யா என்றாராம் டைரக்டர். தயாரிப்பு நிர்வாகியும் இவர் கேட்ட கிழவிகளை லோக்கல் கிராமத்திலிருந்தே அழைத்து வந்திருக்கிறார். வந்த இடத்தில்தான் வம்போ வம்பு.
அத்தனை பேருக்கும் சுடிதாரை மாட்டி விட்டுவிட்டார். பூகம்பம் அதோடு நின்றதா என்றால் அதுதான் இல்லை. அதற்கப்புறம் அந்த கிழவிகளுக்கு நீச்சல் காட்சி இருக்கிறதென்று குளத்தில் இறக்கிவிட்டுவிட்டாராம். நல்ல நேரத்திலேயே நாக்கு நடுங்கும் கிழவிகளுக்கு இந்த குளக் காட்சி, குழிக்குள் தள்ளுகிற நிலைமைக்கு கொண்டு போய் விட்டுவிட்டதாம். நாள் முழுக்க குளத்தில் இறக்கப்பட்ட கிழவிகள் ஒரு கட்டத்தில் அந்தர் தியானமாகிவிடும் சூழ்நிலை ஏற்பட, அவசரம் அவசரமாக கரையில் ஏற்றினார்களாம் அத்தனை பேரையும்.
கொஞ்சம் சூதானமா இல்லாம போயிருந்தா, மொத்த கிராமமும் கூடி கும்மியடிச்சுருப்பாய்ங்க… என்று பதைபதைப்போடு விவரிக்கிறது படக்குழு. குறும்படங்களில் நடித்த ரவிக்குமார் ஹீரோவாகவும், மிஸ் பெங்களூரு பட்டம் வென்ற பவித்ரா ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கிறார்கள். பையனை நேர்மையான கலெக்டர் ஆக்குகிறார் அப்பா. அவனோ நேர்மையின் விளைவால் பெற்ற அப்பா அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்புகிறான் என்று கதை சுருக்கத்தையும் சொல்லி, நெஞ்சில் கலவரம் ஏற்படுத்துகிறார் டைரக்டர் .
Director Anbu Selvam had a miraculous escape!
No, we are not talking about any accident or storm. The director, R.K.Anbu Selvan, really made a great escape by his timely act during the shoot of his debut film, ‘En Nenjai Thottaye’. He shot a scene in which few aged women were to take bath in a lake. They were in the lake almost for half a day while the shoot was on. But unable to bear the chillness the aged women were on the verge of collapse. Timely interference helped the aged women to get to the lake-bund, there by untoward was avoided. Had some mishap occurred the entire unit would have faced the wrath of the entire village?
Ravikumar who acted in short films is playing the hero and Miss Bengaluru Pavithra playing the female lead. The story is about how a father made his son an honest collector, and how the son sent his parents to jail because of his honesty, is the crux of the story, explained the director.