அடியாட்களுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல… சிவகார்த்திகேயேனின் ‘பவுன்சர்’ விளக்கம்!

தன்னையே ஒரு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலொழிய இந்த கறையை அழிக்க முடியாது என்று நினைத்திருப்பார் போலும். ‘பவுன்சர்கள்’ துணையில்லாமல் வந்தார் சிவகார்த்திகேயன். இது மான்கராத்தே படத்தின் பிரஸ்மீட். ‘எங்க டெக்னீஷியன்களோட ஒருமுறை கூட உங்களை மீட் பண்ணல, அதான் இந்த சந்திப்பு’ என்று பேச ஆரம்பித்தார் அவர். பம்பரம் எவ்வளவு சுற்றினாலும் ஆணிதானே முக்கியம்? அந்த ஆணித்தரமான கேள்வியை அவரிடம் கேட்டேவிட்டார்கள் நிருபர்கள்.

மான்கராத்தே படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களை கூட உள்ளே விடாதளவுக்கு கெடுபிடி. ஏன்ங்க? இது முதல் கேள்வி…

‘சார். நான் அந்த விழாவுக்கு ஆர்கனைசர் இல்லே. இதுக்கு நான் எப்படி பதில் சொல்றது?’. -குதிரை தப்பிவிட்டது.

அடுத்த கேள்வி. ‘பவுன்சர்கள் துணையோடுதான் நீங்க விழாவுக்கு வந்தீங்க. அதுக்கு முதல் வாரம் அதே தியேட்டர்ல நடந்த விழாவுக்கு ரஜினி வந்தார். அவருக்கே பவுன்சர் இல்லே. ஏன் உங்களுக்கு மட்டும்? இந்த கேள்விக்கு சற்று விலாவாரியாகவே பேச ஆரம்பித்தார் சிவா.

‘சார்… நான் சினிமாவுக்குள்ளேயே தனியாதான் சார் வந்தேன். அடியாட்கள் துணையோடு நான் விழாவுக்கு வந்தேன்னு சிலர் எழுதியிருக்காங்க. ஒரு அடியாளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட ஐம்பது அடியாளுக்கு ஒரு லட்சம் கொடுக்கணும். அவ்வளவு வசதி எங்கிட்ட இல்ல சார். இன்னொன்னு… எப்பவும் நான் தனியாதான் வருவேன். இங்கே கூட நான் தனியாதான் வந்திருக்கேன். பந்தாவெல்லாம் பண்ணவே இல்ல. நீங்க புரிஞ்சுக்கணும்’ என்றார் சிக்கலும் சிலேடையுமாக.

அப்புறம் பேச்சு டாஸ்மாக் காட்சிகள் பற்றி போனது. ‘உங்களை சின்ன குழந்தைகள் முதல், எல்லா வயசுக்காரர்களும் ரசிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது குடிக்கிற காட்சியில் நீங்க நடிக்கணுமா? தவிர்க்கலாமே? ’

‘கதைக்கு அப்படியொரு காட்சி தேவைப்பட்டால் அதை மறுக்க முடியாது. சிவகார்த்திகேயன் கதையில் தலையிடுறாருன்னு கூட கெட்டபேர் வரும். அதே நேரத்தில் நான் அடுத்ததாக நடிக்கும் டாணா படத்தில் கதைப்படியே ஹீரோ தண்ணியடிக்க மாட்டார். தம்மடிக்க மாட்டார். அதனால் அந்த படத்தில் டாஸ்மாக் காட்சி இருக்காது. கதைக்கு தேவைப்படும்போதுதான் அப்படி… வேற வழியில்ல’ என்றார் சிவகார்த்திகேயன்.

என்ன நினைத்தாரோ? ‘நான் நிஜ வாழ்க்கையில் குடிச்சதும் இல்ல. ஸ்மோக் பண்ணியதும் இல்லே’ என்றார். அதுவும் இரண்டு முறை அதே வார்த்தைகளை ரிப்பீட் செய்தபடி.

‘மான்கராத்தே’ பட வியாபாரம், ஹன்சிகா பற்றி… நயன்தாரா பற்றி என்றெல்லாம் நீண்….ட அந்த பேட்டி மான்கராத்தே வெற்றிவிழாவில் சந்திப்போம் என்ற நல்ல செய்தியோடு முடிந்தது.

அதுவரைக்கும் கடவுளே… சிவகார்த்திகேயன் பற்றி கெட்ட செய்தி வராமல் காத்தருள்வாய் பராபரமே!

I have no capacity to maintain ‘bouncers’ – Siva Karthikeyan

Siva Karthikeyan met the media along with the technicians of his upcoming film Maan Karate. Reporters were posing the questions to him as if to wait for such an opportunity.

Siva said that he was not the organiser for the audio launch of the film, and so he could not answer when asked about the hard security measures shown even to the guests.

When queried about the ‘bouncers’ seen with him during the launch, Siva Karthikeyan in a soft tone said that he cannot afford to keep the security guards (bouncers). He also made it plain that he had not come to the press meet without any security guards.

When asked about how he is seen in TASMAC scenes in his film, as his films are watched by family audience, he responded in an articulate manner. He said if the script needs such scenes it is inevitable that I have to act. He quoted that there is no TASMAC scene in Maan Karate, as the script does not need such a scene. He also disclosed that he has no ‘drinking’ and ‘smoking’ habits in real life.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கூப்டுருவாங்களோ…? கையை பிசையும் கைப்புள்ள?

சிரிக்க வச்சமா, சிந்திக்க வச்சமான்னு இல்லாம லேசா அரசியல் பக்கம் போனதன் விளைவை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அதன் தொடர்ச்சிதான் இது. ஜெகஜ்ஜால புஜபல...

Close