அடுத்த சூப்பர் ஸ்டார் ! சிவகார்த்திகேயனை ஏற்றி வைத்த மான் கராத்தே ஆடியோ விழா?

‘கூட்டமெல்லாம் ஓட்டுகளா மாறுனா நீதாம்ப்பா சி.எம், இல்லேன்னா பி.எம்’ என்று யாரும் பற்ற வைக்கவில்லை. மற்றபடி சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரும்புகிற இடமெல்லாம் தலைகள். யாரையும் யாரும் இடிக்காமல் உள்ளே செல்லவோ, உட்காரவோ முடியாது என்கிற நிலைமை. எல்லாம் அனிருத்துக்காகவும் சிவகார்த்திகேயனுக்காகவும் வந்த கூட்டம். இருவரின் பெயரை சொல்லும்போதெல்லாம் உய் உய் உய்யென்று விசில் பறந்தது. அதற்கு பொருத்தமாக வந்திருந்த விஐபிகளில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட பாதி பேருக்கு மேல், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்’ என்று கூற, அவற்றையெல்லாம் எவ்வித வெயிட்டையும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் சற்று சைலண்டாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். இறுதியாக பேசும்போது மட்டும், ‘இங்க பேசுனவங்க என்னென்னவோ சொன்னாங்க. என் படத்தை பார்த்து எல்லாரும் சந்தோஷப்படணும். அதுதான் என்னோட ஒரே எண்ணம்’ என்றார் அவர்.

ஷங்கர், முருகதாஸ் ஆகிய இருவரும்தான் இந்த விழாவின் ஆகப்பெரிய கெஸ்ட். ‘நான் இங்க அனிருத் ரசிகனாதான் வந்திருக்கேன்’ என்றார் ஷங்கர். அவருடைய 3 படத்தின் பாடல்களில் ஆரம்பித்து சமீபத்திய ‘மான் கராத்தே’ வரைக்கும் எல்லா பாடல்களையும் அவர் பட்டியலிட்டதுதான் வியப்பு. இவரும் கூட சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை வியக்காமல் அமரவில்லை. ‘உங்க ரூட் சரியா போயிட்டு இருக்கு. இதே மாதிரி போனீங்கன்னா முதலிட ஹீரோக்கள் வரிசையில் இடமிருக்கு’ என்றவர் மான் கராத்தே படத்தின் காமெடியன் சூரியையும் வாயார பாராட்டினார்.

எனக்கும் சூரியை என் படத்தில் பயன்படுத்திக்கணும்னு ஆசையிருக்கு. நான் அவர் வீட்டுக்கு தேடிப் போய் கால்ஷீட் கேட்பேன். அப்போது அவர் வீட்டில் ஏதும் நாய் இல்லாமல் இருக்கணும் என்றார் காமெடியாக. ஏனென்றால் இவருக்கு முன்பு பேசிய சூரி, ஷங்கரிடம் வாய்ப்பு கேட்க போன கதையை சொல்லி, அங்கு கட்டப்பட்டிருந்த நாய், மற்றும் வாட்ச்மேன் பற்றி வயிறு வலிக்கும்படி விவரித்திருந்தார். அதன் தொடர்ச்சிதான் ஷங்கரின் இந்த பெருந்தன்மையான மடக்கல்!

முருகதாஸ், ஷங்கர் ஆகிய ரெண்டு பேர் படத்திலேயும் நான் நடிக்கணும்னு முன்னாடியெல்லாம் ரொம்ப கனவு காணுவேன். திடீர்னு ஒருநாள் முருகதாஸ் கூப்பிடுறாருன்னு சொன்னாங்க. போயிருந்தேன். இந்த படத்தின் கதையை சொன்னார். ஒரு அஞ்சு நிமிஷம் அவர் என்ன சொல்றாருன்னு என் காதுல விழவேயில்லை. அவரையே பார்த்துகிட்டு இருந்தேன். என் கனவு பலிச்சிருச்சு. அவரு எழுதுற கதையில் நான் நடிச்சுட்டேன் என்று முகம் மலர்ந்தார் சிவகார்த்திகேயன்.

ஹன்சிகா கூட நான் நடிக்கிறேன்னு சொன்னப்ப பாருப்பா… சிவகார்த்திகேனுக்கு மச்சம்னாங்க. ஏங்க? நான் நடிக்கதானே செஞ்சேன்… என்றார் ஏக்கமாக. ‘எனக்கு எந்த கவலையும் பயமும் இல்லை. இவ்ளோ பேர் எனக்காக இருக்கீங்க, என்னை இவ்ளோ உயரம் கொண்டு வந்த என்னோட ரசிகர்கள் என்னை அவ்வளவு சீக்கிரம் கீழே விட்ற மாட்டாங்க. எனக்கு அதுபோதும்’ என்றார் சிவகார்த்திகேயன்.

அவருக்கா பேச தெரியாது?

Siva Karthikeyan can become top heroes if he follows the same route he is on now – Director Shankar

The audio launch of Maan Karate was held on 16th March at Sathyam multiplex, Chennai. There was a huge crowd anticipating their favourite Sivakarthikeyan and music composer Anirudh who were given loud cheers whenever their names were pronounced by the speakers during the event.
Everyone was effusive in their praise of Sivakarthikeyan as if the event was being held to honour Sivakarthikeyan. While Producers’ Council Chairman Kayaar and the special guests were declaring that next super star will be Siva Karthikeyan, the actor took their salutation with all humility. When Siva Karthikeyan spoke, he thanked all those who spoke high of him. He further said, “Lot of people here have spoken great words about me. But I do not know if I am a hero or a star. I am just happy to see myself on screen and wish to be the same always,” he noted. He said he was very excited when he was told that director Murugadoss called him. “When I met him Murugadoss sir narrated me the story, but I heard nothing except that I was thinking in my mind that I will be acting in director Murugadoss sir’s story”, Siva recalled with excitement. He further said that some people made even fun of me that I play opposite to Hansika. “I am confident that my fans who made me to be in the position I am now at present, will not let me fall” he declared.

Director Shankar and director Murugadoss who were the special guests for the occasion. Shankar said that he came here as he had become a fan of music composer Anirudh. He also praised Siva Karthikeyan and said, “If Siva Karthikeyan follows the same practices he is currently doing, he can soon be seen amongst the top stars in the industry”. He also said that he liked Soori and would to his house to ask for his call sheet in his next film but he should make sure that his pet dog is not around then. He was responding to Soori’s earlier narrated humorously how he planned to visit director Shankar’s house when a dog was up there standing.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்திய பெண்களை எச்சரிக்கும் ஹாலிவுட் படம்

ஹாலிவுட் தமிழர்கள் என்று சிலரை பார்த்து காலப்போக்கில் நாமெல்லாம் காலரை உயர்த்திவிடத்தான் போகிறோம். அதற்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள் நம் தமிழர்கள். அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான...

Close