அடுத்த புகார் யாரு மேல? – பிரஸ்மீட்டில் நஸ்ரியாவை ஆத்திரமூட்டிய நிருபர்கள்
சற்குணத்திற்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான சில இயக்குனர்கள் இந்த பிரச்சனையில் குதித்ததாலும், தமிழ்சினிமாவில் தனக்கு சீக்கிரம் ‘பேக்கப்’ சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலும் தனது ஆவேசத்திலிருந்து பின் வாங்கிக் கொண்டார் நஸ்ரியா.
இன்று மாலை போர் பிரேம்ஸ் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை அவர் அளிப்பார் என்று கூறப்பட்டது. ஏழு மணிக்கு வருவதாக இருந்த நஸ்ரியா, ஆடி அசைந்து எட்டே முக்கால் மணிக்கு வந்தார். அவர் கொச்சினிலிருந்து விமானத்தில் வருவதால்தான் அவ்வளவு லேட் ஆகிவிட்டதாம். நிருபர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அவர் தனது அடங்க மாட்டாத கோபத்தை பிரஸ்சிடம் காட்டியதுதான் வேடிக்கை.
காலையில் இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன் என்றார் நஸ்ரியா. உண்மையில் அவர் காலையில் கொச்சினில் ஒரு படப்பிடிப்பில் இருந்தாராம். இந்த தகவலை முன் கூட்டியே அறிந்து கொண்ட பிரஸ் எந்த தியேட்டரில் பார்த்தீங்க என்று கேட்டதும் பேந்த பேந்த முழித்தார். அதற்குள் பக்கத்திலிருந்த சிலர், காதோடு காதாக இந்த தியேட்டர்லதான் என்று சொல்ல, அப்படியே கிளிப் பிள்ளை போல ஒப்பித்தார் நஸ்ரியா. ஆனால் காலையில் இதே ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் நஸ்ரியாவின் அப்பாவும் அவரது வழக்கறிஞர்களும் நய்யாண்டி படத்தை பார்த்தார்களாம்.
ஆட்சேபணைக்குரிய அந்த காட்சி ட்ரெய்லரில் மட்டும்தான் இருக்கிறது. படத்தில் இல்லை. அதையும் நீக்குவதாக சற்குணம் கூறியதால் நான் கொடுத்திருந்த போலீஸ் கம்ப்ளைண்ட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இருக்கிறேன் என்றார் நஸ்ரியா. வார்த்தைக்கு வார்த்தை டைரக்டர் சீட் பண்ணிட்டாரு என்று அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
இந்த பிரச்சனையில் நீங்கள் உங்கள் முஸ்லீம் மதத்தை ஏன் இழுத்தீர்கள் என்று நிருபர்கள் கேட்ட போது, நான் மதத்தை இழுக்கவில்லை என்றார் ஒரேயடியாக. ஆனால் தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியாமல் உங்கள் விருப்பத்திற்கு படத்தை முடக்க நினைத்தது என்ன நியாயம் என்றும் பத்திரிகையாளர்கள் நஸ்ரியாவிடம் கோபமாக கேள்வி எழுப்பினர்.
அடுத்த கம்ப்ளைண்ட் யாரு மேல? எப்பம்மா? என்று அவருக்கு கோபம் ஏற்படுத்தினார்கள் சில பத்திரிகையாளர்கள்.
எப்படியோ…, கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வந்த குழப்பம் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொடுத்த விளக்கத்திற்கு பிறகு தீர்ந்திருக்கிறது. இந்த பிரஸ்மீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தனுஷ், சற்குணம் ஆகிய இருவருமே வரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மட்டும் வந்திருந்தார்.
Nazria to withdraw her Police Complaint against the director
A press meet was scheduled at 7 pm on 9th Oct, with Nazriya addressing the press. The press meet began at 8.45 instead of 7 pm, it was announced that because of delayed flight she came late. After the rituals, the press became aggressive and sought answers to their questions and clarifications from Nazriya. Earlier Nazriya announced that she saw the film Naiyaandi in the morning and the scene she was objecting was not there in the film, but only in the trailer. Since the director has assured her of removing the scene from the trailer too, she has decided to withdraw the police complaint, she said. Though it was announced that Dhanush and director Sargunam too would join the press meet, they did not turn up, and only the film producer Kadhiresan participated in the meet. After two days of struggle, the Nazriya episode ended amicably, which could have been handled in a matured manner.
iva periya miyira? theviduya