அடுத்த ராமராஜன் ஆகிறார் சசிகுமார் – எல்லாம் பாலா புண்ணியம்!

தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தை விநியோகஸ்தர்கள் எல்லாரும் ஒன்று கூடி ஏலம் எடுத்தது இரண்டே படங்களுக்குதான். ஒன்று ராமராஜனின் கரகாட்டக்காரன். இன்னொன்று தனுஷின் திருடா திருடி. இதில் ராமராஜன் காசியில் விற்கும் தீப்பெட்டி போலாகிவிட்டார். மிச்ச மீதியிருக்கிற தனுஷும் கொடுக்கிற ஹிட்டுகளை (?) பார்த்தால் நமத்துப் போன தீப்பெட்டியாகிவிடுவாரோ என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் ராமராஜனின் நினைவுகளை கிளறிவிட ஒரு படம் வரப் போகிறது. அதையும் பாலா எடுக்கப் போகிறார் என்பதுதான் ஆச்சர்யம், அழகு, சூப்பர்….

நந்தா மாதிரி ஒரு படத்தை பாலா எப்போதுதான் கொடுப்பாரோ என்று அவரது ரசிகர்கள் காத்திருக்க, அவரோ அழுக்கு பாயும் உதவாத பெட்ஷீட்டும் போல எல்லா ஹீரோக்களையும் சகதியில் புரட்டி சங்கடத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சொல்லி வைத்தாற் போல அவரது சமீபத்திய படங்கள் எதுவும் ஓடுவதுமில்லை. இருந்தாலும் பாலாவுக்கான கிரேஸ் அப்படியே இருப்பது கண்கொள்ளா சாட்சி. இதற்கப்புறம் பாலா எடுக்கப் போகும் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதையே பட்டிமன்றம் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. கடைசியாக சசிகுமார் சிக்கியதாக தகவல். அவர் நடிக்கப் போகும் படத்தில் சசிகுமாருக்கு என்ன கேரக்டர்?

கரகாட்டக்காரராக நடிக்கிறாராம். மதுரை பக்கத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கரகாட்ட செட் ஒன்றின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். சசிகுமார் தலையில் கெரகத்தை வைத்து அவரை ஆட விட்டால் எப்படியிருக்கும்? கதையை கேட்டதிலிருந்து சசி மிரள்கிறாரோ இல்லையோ, நிச்சயம் ராமராஜன் மிரள்வார். ஏனென்றால் கரகம் என்றாலே ராமராஜனின் லிப்ஸ்டிக் பூசிய உதடுகள்தான் இதுவரை நினைவுக்கு வந்தது. இனிமேல் சசிகுமார் வருவாரே என்பதுதான் இந்த மிரட்சிக்கு காரணமாக இருக்க முடியும்.

 

Sasikumar to play the lead in Bala’s film

Director Bala is known for giving his films a reality touch, no matter if the film is successful commercially. But there is craze for Bala’s film and everyone including ourselves will be eager to hear what would be Bala’s next film and who would play the lead.

It is now confirmed that Sasikumar will play the lead in the film, portraying the character of ‘karagattakkaran’. Yes, it reminds of the film by Ramarajan, especially the ‘banana’ comedy by Goundamani and Senthil. But Bala’s film is a true life story of a Karagattam exponent in Madurai. Wish the team wins hands down commercially, this time.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Malini 22 Palayamkkottai Trailer

https://www.youtube.com/watch?v=gCusPxYWttA

Close