அட… இது வேற சினேகாங்க! துண்டு போட்டு தாண்டும் இயக்குனர்

‘வேணும்னா ஒரு ஸ்பெஷல் ஷோ கூட சினேகாவுக்கு போட்டு காட்டுறேன். அந்த சினேகா வேற. என் படத்தில் வர்ற சினேகா வேற…’ என்று சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாக சத்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார் முத்துராமலிங்கன். கோடம்பாக்கத்தின் புத்தம்புது இயக்குனர்களில் ஒருவர்தான் என்றாலும், பொல்லாத குறும்பும் கொள்ளாத நக்கலும் கொண்டவர் இவர். இவரது எழுத்தை வாசித்தவர்களுக்கு முத்துராமலிங்கன் இயக்கிய ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தை பார்க்கும் ஆர்வம் மற்றவர்களை விட 100 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கும்.

கொஞ்ச காலம் சினிமா ஸ்டார் சினேகாவுக்கும் மேனேஜராக இருந்திருக்கும் இவரது படத்தின் மீது எள்ளுருண்டையளவுக்கு சந்தேகம் வருவது இயல்புதான் என்றாலும், அவரே இல்லை என்று சொல்லிவிட்ட பின் அதுகுறித்து பேசுவானேன்? ஆனால் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சிலந்தியை கூட சீறும் புலியாக வர்ணிக்கும் இயக்குனர்களையே பார்த்து எரிச்சலுற்று இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு முத்துராமலிங்கன் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் பற்றியும், படத்தில் நடித்தவர்கள் பற்றியும், இந்த படம் தனக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் பேசிய வார்த்தைகள் கொஞ்சம் பெரிய சைஸ் ஹமாம்தான்.

பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்கதான் தமிழன் டி.வி உரிமையாளர் கலைக்கோட்டுதயத்தை சந்திக்க போனாராம். ஒரு காலத்தில் முத்துராமலிங்கன் எடிட்டராக இருந்த சத்திரியன் புலனாய்வு இதழில், இந்த கலைக்கோட்டுதயம் சீஃப் ரிப்போர்ட்டர். அந்த பழக்கத்தில்தான் இந்த கடன் கேட்பு படலம். ‘இன்னுமாண்ணே நீங்க இந்த நிலைமையில் இருக்கீங்க? இந்ததாங்க அட்வான்ஸ். நானே ஒரு படம் தயாரிக்கிறேன். நீங்கதான் டைரக்டர் என்றாராம் அவர். சட்டை நழுவி சலவை மிஷினுக்குள் விழுந்த மாதிரி பளிச்சென்று ஆன முத்துராமலிங்கன் அன்று வைத்த தலைப்புதான் ‘சினேகாவின் காதலர்கள்’. ஒரு பெண் தன் வாழ்வில் கிராஸ் செய்யும் ஆண்களை பற்றி சொல்லுவதுதான் கதையாக இருக்க வேண்டும்.

இந்த படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு என்னுடைய பத்திரிகை நண்பர்கள் பலரை இதில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த படம் நான் எடுத்தால் அதில் நண்பர்களுக்கு நிறைய வேலை இருக்கு. அதுவும் நல்ல சம்பளத்தோட என்றார் முத்துராமலிங்கன். அப்படியும் சொந்த டிக்கெட்டில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் நடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் இரு பத்திரிகையாளர்கள். ஒருவர் பன்னீர் செல்வம். மற்றொருவர் சுரேஷ். ட்ரெய்லரில் அவர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது முத்துராமலிங்கனின் பரந்த மனசு.

‘இந்த படத்தில் எல்லா பாடல்களும் நீதான் எழுதணும்னு அத்தனை பாட்டுக்கான சம்பளத்தையும் ஒரே பேமென்ட்டா கொடுத்துட்டாரு தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம். ஆனால் உடல் உபத்திரவம் மற்றும் உப ‘திரவம்’ காரணமா என்னால ஒரு பாட்டுதான் எழுத முடிஞ்சுது’ என்று தள்ளாடாமல் பேச ஆரம்பித்தார் பத்திரிகையாளர் நெல்லை பாரதி. இவர் தள்ளாடாமல் இருப்பதே சில அபூர்வமான சந்திப்புகளின்போதுதான். அந்த மேடையில் அப்படியொரு நிமிடத்தில்தான் அவரது முழு உரையையும் கேட்டு போதையானார்கள் சக பத்திரிகையாளர்கள்.

‘இந்த படத்தை யாருமே வாங்கலேன்னாலும் என்னால 100 தியேட்டர்ல இந்த படத்தை ரிலீஸ் பண்ண முடியும். போட்ட பணம் வந்தா சந்தோஷம். இல்லேன்னா டோன்ட் வொர்ரி. படம் எடுப்பதை நிறுத்திப்பேன்’ என்றார் இப்படத்தின் தயாரிப்பாளரும், தமிழன் டி.வி உரிமையாளருமான கலைக்கோட்டுதயம். ‘வேட்டிய கட்டியாவது வெளியிட்டு உதவுங்கப்பா’ என்று வெள்ளை ஸ்கிரீனுக்காக ஏங்கும் நுற்றுக்கணக்கான இயக்குனர்களுக்கு மத்தியில் இப்படியொரு தைரியமான தயாரிப்பாளர் கிடைத்திருப்பது முத்துராமலிங்கன், நெல்லை பாரதிகளின் அதிர்ஷ்டம்.

அந்த அதிர்ஷ்டக்கல் மோதிரத்திற்கு பாலீஷ் போடாவிட்டாலும் பரவாயில்லை, தொலைக்காமலிருப்பது உங்கள் சாமர்த்தியம். மற்றபடி சினேகாவின் லவ்வர்சை சந்திக்க வீ ஆர் வெயிட்டிங்…!

Director Muthramalingan went for a favour but returned with payment with offer!

The trailer and audio release of Snehavin Kadhalargal was held at Prasad Lab on 19th Feb. Producers Council Chairman Kayaar, Secretary T. Siva, director Seeman and others graced the occasion. Kayaar released the audio cassette and JSK Corporation Head Sathish received it.

Speaking on the occasion Nellai Bharathi narrated how director Muthuramalingan got the opportunity to direct the film. Director Muthramalingan went to meet the producer Kalaikottu Udhyam the owner of Thamizhan TV, for asking a personal loan of Rs.10000/= The producer was surprised to see his financial conditions. Kalikottu Udhayam had earlier worked under Muthuramalingan as Chief Reporter, when Muthuramalingan was working as Editor. As he know his former boss he immediately gave him money as advance and asked him to direct a film. Elated Muthuramalingan true to his self completed the film without burdening the producer with cost escalation or unnecessary expenditures.

Nellai Bharathi also confided that due to his personal ailments he could not accede to the requests of the film makers to write the lyrics for all the songs. However he did write a lyric for a song, for the sake of his friendship with the makers.

Director Muthuramalingan explained the film has nothing to do with actress Sneha, though he earlier worked with her as her Manager.

He also assured his friends in the media, that due to stringent budget he could not make use of his friends in the media, but would make use of their help with good salary package in his next outing. It is to be noted however that he did provide opportunities for couple of media friends in Snehavin Kathalargal.

Three songs were screened , one with melody, one with folk number describing the Madurai town and the other a melancholy, with good camera work, the songs were appealing. Hope Snehavin Kathalargal would provide the first step for its director and the producer for whom it is their maiden venture.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வீரம், ஜில்லா ரெண்டுமே அவுட்! உண்மையை போட்டு உடைத்த கேயார்

அஜீத்தின் வீரமும் சரி, விஜய்யின் ஜில்லாவும் சரி. மிகப்பெரிய ஹிட்... ஒரே வாரத்தில் 60 கோடி கலெக்ஷன் என்றெல்லாம் எழுதி ஊர் வாயில் உப்புமா சட்டியை பற்ற...

Close