அண்ணன் தங்கை கதை “ இஞ்சி முறப்பா “
புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ இஞ்சி முறப்பா”இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும் ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா , சிரி, ரகு ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
பாடல்கள் – பழனிபாரதி
இசை – மணிசர்மா
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா
ஸ்டன்ட் – நந்து
தயாரிப்பு நிர்வாகம் – வாசு
நிர்வாக தயாரிப்பாளர் – B.R.ராஜு
தயாரிப்பு – A.P.ராதாகிருஷ்ணன், மலர்கொடி முருகன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா. இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி அவரிடம் கேட்டோம்….. தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணனின் கதை இது. தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம்.
மணிசர்மாவின் இசையில் அணைத்து பாடல்களும் ஹிட் ரகம். படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஸ்ரீபாலாஜிக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளோம்.
காதலியாக சோனி சிறிஷ்டாவும், தங்கையாக ஸ்ரீ என்ற புதுமுகம் கதா பாத்திரத்தின் சிறப்பு அம்சம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.