அதான்டா அஜீத்தின் மவுசு…
வெற்றிலை பாக்கே மாற்றல… அதற்குள் விருந்து ரெடியான்னு கேட்டால் எப்படியிருக்கும்? அப்படி கேட்டவரிடம், பொறுமை ப்ளீஸ் என்று சொல்றதுதானே நேர்மை? ஆனால் அப்படி சொல்லாமல் ஆன வரைக்கும் அமுக்க பார்த்தாராம் ஒரு தயாரிப்பாளர். அதுவும் அஜீத்தின் நாக்குறுதியை நம்பி நடந்த விஷயங்கள்தான் இவ்வளவும்.
ஆரம்பம் படத்தின் தாறுமாறான கலெக்ஷன் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் வெநீர் ஊற்றுகளையெல்லாம் பன்னீர் ஊற்றுகளாக்கிவிட்டு போயிருக்கிறது. இந்த நேரம் பார்த்து இவர் மீது இன்னும் இம்ப்ரஸ் ஆன அஜீத், என் அடுத்த படத்தின் கால்ஷீட்டும் உங்களுக்கே என்று வெளிப்படையாக அறிவிக்க, கோடம்பாக்கத்தின் திடீர் திருப்பதியானது ரத்னத்தின் ஆபிஸ். முந்தைய கச்சடாவெல்லாம் ஒழிந்தது. இனி நிதியும் நமக்கே, நிம்மதியும் நமக்கே என்கிற அளவுக்கு தெம்பாகிவிட்டார் மனிதர்.
இவரை மேலும் தெம்பாக்க வந்தார்களாம் ஒரு புதிய சேனல் அதிகாரிகள். நீங்க அஜீத்தோட சேர்ந்து தயாரிக்கிற படத்தை நாங்களே வாங்கிக்கிறோம். எவ்ளோ சொல்றீங்க என்று கேட்க, இருபது கோடி என்றாராம் ரத்னம். எவ்வித தயக்கமும் இல்லாமல் இதற்கு ஒப்புக் கொண்டார்களாம் அவர்கள். அந்தரத்துல தொங்குற நிலாவுக்கு அஸ்திவாரம் எதுக்குன்னு நினைக்கிறாங்களே… அதான்டா அஜீத்தின் மவுசு என்பார்கள் அவரது
ரசிகர்கள்.
It is pouring for Arrambam producer AM Rathnam
Earlier we have reported that Ajith along with Gautham Menon ‘car-dashed’ into Arrambam producer AM Rathnam’s office and told him that he is giving call sheets for his next film to be directed by Gautham Menon and that Rathnam would be the producer for that film too. There is a saying ‘when money comes, it pours’! It is happening to the delight of Rathnam. No, we are not talking about Arrambam’s collections records. On one side it has already destroyed all the financial problems for the producer. Now, besides these collections phenomenon, another pipeline has been opened up for Rathnam.
Hearing the confirmation that Rathnam would be the producer for Ajith’s next film, officials from a recently launched TV channel approached the producer for satellite rights of the film and asked for the price. When he quoted Rs.20 crores, without battling the eyelids, they agreed to it and confirmed to sign the papers. Is it not ‘pouring’ now for Rathnam?
THALA daa