அது என்னோட தொப்புளே அல்ல… – டைரக்டர் மீது நடிகை நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

எது ஆபாசம்? எதிலிருந்து எது வரைக்கும் காட்டினால் ஆபாசமில்லை? இதையெல்லாம் ஒரு விளக்க கையேடாக தயாரித்து யாராவது நடிகைகளோ, அல்லது அவர்கள் சார்பானவர்களோ வழங்கினால் தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் மானம் காற்றில் பறக்காமல் காப்பாற்றப்படும். அவ்வளவு அதி முக்கியமானதாக இந்த கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு ஏன் வந்தது?

இன்று நடந்த களேபரத்தை கவனித்தவர்களுக்கு புரிந்திருக்கும். கவனிக்காமல் போனவர்களுக்கு நமது ஆழ்ந்த எரிச்சலுடன் கூடிய விளக்கம். நடிகை நஸ்ரியா இன்று தனது பேஸ்புக்கில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ‘நய்யாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார் அல்லவா? ஒரு காட்சியில் தாவணி விலகி தொப்புள் தெரியும்படி படமாக்க விரும்பினாராம் டைரக்டர் சற்குணம். சற்குணத்தின் நற்குணத்திற்கு இது நல்லதில்லை என்று நஸ்ரியா நினைத்திருக்கலாம், அல்லது தனது தொப்புள் பிரதேசத்தை நமது நல்லுலகத்திற்கு காட்ட விரும்பாதிருந்திருக்கலாம். ‘ம்க்கூம்… அதுக்கு வேற ஆள பாருங்க’ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம்.

நஸ்ரியா சொன்னதை சீரியசாக பின்பற்றிய இயக்குனர், வேறொரு நடிகையை அழைத்து அவரது தொப்புளை மட்டும் குளோஸ் அப்பில் எடுத்து, நஸ்ரியாவோடு மேட்ச் பண்ணிவிட்டார். இன்று அந்த தகவலை தெரிந்து கொண்டு தாட் பூட்டென்று குதித்த நஸ்ரியா, நடிகர் சங்கத்தில் சற்குணத்தின் மீது புகார் கொடுத்துவிட்டார். தான் புகார் கொடுத்திருக்கும் தகவலைதான் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார் தனது பேஸ்புக்கில்.

படத்தில் காட்டப்பட்டிருக்கும் தொப்புள் யாருடையது? நஸ்ரியாவுடையது இல்லை என்று சொல்வதற்கு ஆதாரம் என்ன? இரண்டு தொப்புள்களையும் ஒப்பிட்டு பார்க்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது என்றெல்லாம் சங்க உறுப்பினர்கள் பூதக்கண்ணாடியோடு கிளம்பினால் என்னாகும்?

சே… சே.. ஒரு குத்து மதிப்பாதான் தீர்ப்பு வரும்!

Nazriya alleges cheating by director, files complaint with Nadigar Sangam

A controversy has raised its head for team Naiyaandi. The female lead Nazriya Nazim has alleged that the producer and director of the film, Kathiresan and Sargunam respectively have used a body double for an intimate scene in the film. She has posted her allegations in her verified FB page which started making rounds in the social media. She had posted, “I have complained against the producer/director of Naiyaandi to Nadigar Sangham for cheating. They have used a body double to shoot the below scene without my permission. This is against contractual agreements. We will take legal action.” The scene she is referring is one involving Dhanush holding her from behind and she alleges that this scene was shot in a more intimate and glamorous manner with a body double. This still has already made its rounds in the net and has even been showcased as wall posters. So far no one including the director Sargunam, nor Kathiresan the producer and the lead actor Dhanush could be reached nor reacted to the allegations. Well, if it is a breach of contract, Nadigar Sangam will take up the issue and decide, a source from Nadigar Sangam said.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்படியெல்லாம் எழுதுனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்… -த்ரிஷா எச்சரிக்கை!

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சாட்டையை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா. அண்மையில் இவர் சரக்கடித்துவிட்டு சண்டி ராணியாக மாறியதாகவும், இதனால் ஆந்திராவே அல்லோலகல்லோல பட்டதாகவும் நியூஸ் ஏரியாவில்...

Close