‘அந்த ஆண்டவன் புண்ணியத்துல…’ நாக்கு தவறிய கலைஞரின் பேரன்!
கலைஞரின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிற ‘தகராறு’ படத்தின் பிரஸ்மீட்.
நட்ட நடுவில் அருள்நிதி அமர்ந்திருக்க, பேச வந்த அத்தனை பேரும் ‘அவருக்கு குழந்தை மனசு… அவர் இவ்வளவு அன்பா, பந்தாவே இல்லாம நடந்துப்பாருன்னு நாங்க நினைச்சுக் கூட பார்க்கல… அவ்வளவு பெரிய பேமிலியிலேர்ந்து வந்தவரா அவரு? போன்ற ஆச்சர்யங்களை வெளிக்காட்ட, கடைசியில் மைக்கை பிடித்தது குழந்தை. அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் ஒரு பேச்சு!
‘இந்த படத்தை தயாரிக்கிறது என்னோட அண்ணன் துரை தயாநிதி. எனக்கும் அவனுக்கும் பத்து மாசம்தான் வித்தியாசம். ஆனால் நானும் அவனும் அண்ணன் தம்பிங்க மாதிரி பழக மாட்டோம். என்னோட நண்பன் அவன். இந்த படத்தை அவன் எனக்காகவே தயாரிச்சான். எந்த அண்ணன் தம்பியும் அப்படி ஒத்துமையா இருக்க மாட்டாங்க. அதான் உங்களுக்கே தெரியுமே. அண்ணன் தம்பி பிரச்சனையை எழுதி எழுதியே தகராறுல கொண்டு வந்து விட்டுட்டீங்க’ என்று சொல்லிவிட்டு சிரிக்க, புரிந்து கொண்டு சிரித்தது பிரஸ்சும். அதோடு விட்டாரா அருள்நிதி?
இந்த படத்துக்கு முதலில் பகல் கொள்ளைன்னுதான் தலைப்பு வச்சோம். அப்புறம் நீங்கள்லாம் சும்மாயிருக்க மாட்டீங்கன்னு தெரியும் (சிரிப்பு) அதனால்தான் தகராறுன்னு மாத்துனோம். அதுவும் இந்த தலைப்பு எப்படி வந்திச்சு தெரியுமா? டைரக்டர் கணேஷ் தினமும் ஐம்பது தலைப்பாவது எழுதிட்டு வருவாரு. எதுவும் பிடிக்கலேன்னு மறுபடியும் தேடுவோம். ஒரு நான் துரைதான் இந்த டைட்டில் தேடுறதுதான் பெரிய தகராறா இருக்குன்னு சொல்ல, அட… தகராறே நல்லாயிருக்கேன்னு இதை தலைப்பா வச்சோம் என்றவர் அப்படியே தன்னை மறந்து அந்த ஆண்டவன் புண்ணியத்துல கடைசியா டைட்டில் கிடைச்சுது என்றார். ஐயய்யோ… நான் இப்படி சொல்லியிருக்க கூடாதுதான். இருந்தாலும் ஆண்டவன் புண்ணியத்துல இந்த டைட்டில் கிடைச்சுது என்று மீண்டும் அதே வரியை ‘போல்டு’ செய்தார்.
அப்படியே மறக்காமல் ஒரு விஷயத்தை வலியுறுத்தினார் அருள்நிதி. யாரும் நான் இன்னாரோட பேரன்னு நினைச்சு எழுதாதீங்க, பேசாதீங்க. இந்த படத்தை பொருத்தவரை நான் ஒரு நடிகன். அவ்வளவுதான் என்றார். பொதுவா உங்க பேமிலி எடுக்கிற எந்த படத்துக்கும் அரசு வரிவிலக்கு தர்றதில்லையே என்ற கேள்விக்கும் மேலே சொன்ன அதே பதிலை சொன்னார் அருள்நிதி. படத்தின் ஹீரோயின் பூர்ணா பற்றி அவர் அடித்த காமென்ட் கேட்டு அவரும் சிரிக்க, மற்றவர்களும் சிரித்து மகிழ்ந்தார்கள். என் உயரத்திற்கு ஒரு ஹீரோயின் தேடணும்னுதான் முதல்ல தேட ஆரம்பிச்சோம். அப்புறம் யாரும் கிடைக்கல. கடைசியில் எல்லா ஹீரோயின்களை விட குள்ளமா ஒரு நடிகையை கொண்டாந்தாங்க. அதுதான் பூர்ணா என்றார் அருள்நிதி.
படத்தில் பூர்ணா கையிலும் ஒரு அருவாளை கொடுத்து ஆத்திரப்பட வைத்திருக்கிறாராம் டைரக்டர் கணேஷ் விநாயக்! இதெல்லாம் அந்த விநாயகருக்கே பொறுக்காது கணேஷ்….
Arulnidhi makes Thagararu press meet lively!
Arulnidhi starrer Thagararu press meet was held today with all members of the cast and crew participated. Arulnidhi made the press meet a lively one with his wits and sarcasm. Unlike others, he and his cousin brother Durai Dayanidhi are more friends than siblings, he pointed out. Durai has produced the film exclusively for him, said Arulnidhi. He then narrated how toiled they were in selecting a title for the film. It was Durai who accidentally spilled the title while expressing his frustration for finding a title for the film, said Arulnidhi. He also requested the press to write about him as an actor and not as a grandson of so and so. He also expressed his hope that the government will consider about tax waiver for his film for Arulnidhi, the actor. Speaking about his lead pair Poorna he said she was selected after considering several names.