அந்த வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது… -ஹன்சிகாவை எச்சரித்த குஷ்பு
காதல் தோளில் ஏறிக் கொள்ளாத வரைக்கும்தான் எல்லோருக்கும் நிம்மதி. ஏறிடுச்சுன்னா? ஹன்சிகாவிடம் கேட்டுப் பாருங்கள் சொல்லுவார். இதுவரைக்கும் தனது பட ஷுட்டிங்குகளுக்கு நிம்மதியாக வந்து போய் கொண்டிருந்த ஹன்சிகா, இப்போது போகிற இடங்களில் எல்லாம் ஒரு பிரச்சனையை சந்திக்கிறாராம். அது?
மேடம்… காதல்ங்கறது உங்க பர்சனல். அதில் நாங்க தலையிட மாட்டோம். ஆனால் அதை நீங்க செட்டுக்குள்ளே கொண்டு வரக் கூடாது. மூட் அவுட் ஆகி அழுவதும், முடிந்தால் பாதியிலேயே ஷுட்டிங்கை விட்டுட்டு ஓடிவிட பர்மிஷன் கேட்பதும் கூடவே கூடாது என்கிறார்களாம். இதற்கெல்லாம் காதலில் விழுந்த நடிகைகள் தந்திருக்கும் அனுபவ அவஸ்தைகள்தான் காரணம்.
‘அரண்மனை ’ படத்தில் சுந்தர்சி க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியிருக்கும் ஹன்சிகாவிடம் பேசிய குஷ்பு, மற்றவர்கள் சொன்னது மாதிரியே சொன்னாராம். ‘அம்மாடி… காதலிக்கிறது உன்னோட விருப்பம். ஷுட்டிங் முடிஞ்சு ஆறு மணிக்கு மேல என்ன வேணும்னா செஞ்சுக்க, பட் உன்னை தேடி அவர் வர்றதும், அவருக்கு நீ போன் பண்ணி மணிக்கணக்குல பேசிக்கிட்டு இருக்கறதும் வேண்டாம். இப்பவே சொல்லிட்டேன் ’ என்றாராம்.
இதெல்லாம் சாத்தியம்தானா என்பதே தெரியாமல் ஒப்புக்கு தலையாட்டி வைத்தாராம் ஹன்சிகா.