அனிருத் நடிக்கக் கூடாது – பிரபுசாலமன் பேச்சு

சினிமா என்பது எல்லை கோடுகள் இல்லாத கடல் பரப்பு மாதிரி. இங்கு யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே, மீன் பிடிக்க வருகிறவர்களை மீன் பாடி வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது ஒரு மேதைகள் கூட்டம். அந்த கூட்டத்தின் தலைவராக பிரபு சாலமனைதான் போட வேண்டும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்டவர், இசையமைப்பாளர்கள் நடிக்க வருவது பற்றி ஏகத்திற்கும் புலம்பி தீர்த்துவிட்டார். முக்கியமா அனிருத் நடிக்க வருவதை அவர் விரும்பவே இல்லை. ஆனால் இதற்கு அவர் சொன்ன காரணத்தை அனிருத்தே கூட ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் விஷயம் அப்படியிருந்தது.

அதை பிரபு சாலமன் வாயாலேயே கேட்போமே.

அண்மையில் நான் மயிலாடுதுறை போயிருந்தேன். அங்கே ஒரு தியேட்டருக்கு விசிட் அடித்தேன். அந்த தியேட்டர் முதலாளி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். சார்… உங்களை மாதிரி இயக்குனர்களோ, ஹீரோக்களோ ஒரு படம் ஓடலைன்னா அது பற்றி கவலைப்படாம இதே துறையில இன்னொரு வேலையை பார்க்க போயிடுறீங்க. ஆனால் எங்க நிலைமை அப்படியில்ல. காலையில் எழுந்து வந்து தியேட்டரை திறக்க வேண்டியிருக்கு. சுத்தப்படுத்தி படம் போடுறதுக்கு ஏற்பாடு பண்றோம். மாதா மாதம் ஆபரேட்டருக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் சம்பளம் தர வேண்டியிருக்கு. மாசா மாசம் கரண்ட் பில் கட்டியே ஆகணும். படம் ஓடுதோ, ஓடலையோ? இந்த செலவுகளை நிறுத்தவே முடியாது.

அனதால எங்களுக்கு தேவையான மெட்டீரியல் நிறைய கொடுங்க. இப்போ நீங்க கொடுக்கறது எங்களுக்கு பத்தல. நல்ல திறமைசாலிகள்தான் தியேட்டர்களை காப்பாற்ற முடியும். இதே நிலைமை நீடிச்சுதுன்னா இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் 300 தியேட்டர்கள் மூட வேண்டி வரும் என்றார். நான் அனிருத் மாதிரி இசையமைப்பாளர்களிடம் அதைதான் கேட்கிறேன். உங்களை ஒரு மியூசிக் டைரக்டரா இந்த ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. அதனால் அந்த துறையில் என்னென்ன சாதிக்க முடியுமோ? அதில் கவனம் செலுத்துங்க. இன்னும் நல்ல நல்ல படங்களை தியேட்டர்களுக்கு கொடுப்போம். தியேட்டர்களே இல்லாம போச்சுன்னா நாமெல்லாம் நம்ம படைப்புகளை எங்கே கொண்டு போய் காட்ட முடியும்?

எவ்வளவு பெரிய ஆட்டக்காரனா இருந்தாலும், கிரவுண்ட் இருந்தால்தானே ஆட முடியும்? தயவு செய்து புரிஞ்சுக்கோங்க என்றார். நல்ல கருத்துதான். ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் பிரபுசாலமன் சில படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார் என்பதை இந்த செய்தியை படிக்கிற வாசகர்கள் வசதியாக மறந்துவிடவும்.

Director Prabhu Solomon wants Anirudh not to act in films!

Anirudh is reportedly appearing in some forthcoming films apart from Vanakkam Chennai album. Though it was much appreciated and welcomed by the fans, Prabhu Solomon was critical about his coming to act in films.

He narrated an incident in his speech during an event. He said when he visited Mayiladuthurai recently he visited a theatre and was speaking to him. The theatre owner has reportedly told him to give films which have good content so that people can visit theatres. “The recent films that are shown in theatres have not done any good for theatre owners, the theatre claimed. The revenue collected through such films are not even sufficient to pay the salary and electricity bills, the owner bemoaned,” said Prabhu Solomon.

Pointing out the similarity the director made the suggestion that music composer Anirudh should focus on music which has brought him to cinema and he should therefore concentrate on giving better music and thus help theatres earn good profit, he opined.

Though the point of Prabhu Solomon has spoken is indeed a good one which needs to be considered, but people taking to different professions in Cinema is not new and cinema has so for thrived without any difficulty and will go on to do it in future too. Have we not heard that Prabhu Solomon too would be seen in films in near future? Our point is Cinema industry is a ocean and whoever has the skill, talent and equipment can fish freely.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடியாட்களுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல… சிவகார்த்திகேயேனின் ‘பவுன்சர்’ விளக்கம்!

தன்னையே ஒரு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலொழிய இந்த கறையை அழிக்க முடியாது என்று நினைத்திருப்பார் போலும். ‘பவுன்சர்கள்’ துணையில்லாமல் வந்தார் சிவகார்த்திகேயன். இது மான்கராத்தே...

Close