அனுஷ்காவை வெறுப்பேற்றும் துறவிகள்…

ஆந்திராவில் புயலடித்தால் தமிழ்நாட்டில் வெள்ளம் வருமா? சில நேரங்களில் வரும். அனுஷ்கா, பிரபாஸ் நடித்துவரும் பஹுபாலி என்ற தெலுங்கு படத்தை தமிழ்நாடும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. காரணம்? இதில் மெயின் ரோலில் பிரபாஸ் நடித்தாலும் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா. அதுமட்டுமல்ல, அவர் இதற்கு முன்பு நடித்த அருந்ததி டைப் கதை இது என்கிறார்கள். தமிழ்நாட்டிலும் ஹெவியாக கல்லா கட்டிய படம் அது. இப்படி பஹுபாலிக்காக காத்திருக்கிற பெரிய கூட்டத்தில் லேசாக ஒரு கல்லை வீசி கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு செய்தி.

பஹுபாலி என்பது ஒரு ஜைன துறவியின் பெயராம். அன்பே உருவான அவதாரமாம் அவர். ஆனால் இந்த படத்தில் பிரபாஸ் கையில் வாளை கொடுத்துவிட்டார்கள். விடுவார்களா துறவிகள்? இப்போதெல்லாம் துறவிகள்தான் மார்க்கெட் மாஃபியாவை விடவும் கொடுரமாக இருக்கிறார்கள். (ஆள் வைத்து கொலையெல்லாம் செய்கிற அளவுக்கு) இந்த படம் எங்கள் மத பெருமையை குலைக்கிறது. அதனால் தடை செய்ய வேண்டும் என்கிறார்களாம்.

தட்டுக்கு முன்னாடி உட்கார்கிற வரைக்கும் பொறுமையாக இருப்பதும், கை வாய்க்கு அருகே போகும்போது கப்பென தடுத்து நிறுத்துவதும் இவர்களையும் தொற்றிக் கொண்டது போல. இந்த இறுதி கட்டத்தில் போர் வாள் பிடிக்கும் இந்த துறவிகளை கண்டு நுரை தள்ளியிருக்கிறது பஹுபாலி குழு. முக்கியமாக அனுஷ்கா.

இந்த படத்திற்காக உயிரை கொடுத்து சண்டையெல்லாம் போட்டிருக்கிறாராம். அதனால்தான் இந்த அப்செட். படத்தை ஒருமுறை துறவிகளுக்கு காட்டுங்க. பிரச்சனை சால்வ்!

Jain monks raise banner of protest against Bahubali

It is not only in Andhra, even Tamil Nadu is awaiting the release of Anushka-Prabhas starrer Bahubali. It is heard that Bahubali will be on the lines of Anushka’s blockbuster film Arundhathi.

However the team Bahubali is facing a hurdle now. It is said that Bahubali is the name of a famous Jain monk. Hence the Jain monks have started protesting against the film saying that the film be banned as it defames their community and mainly their celebrated monk. The Bahubali team is very upset at this move, especially Anushka who has toiled and taken several risks while shooting for the film.

It has become the habit for certain groups especially religious groups to start raising revolts even before a film or a book is released without going through them what exactly the film or the book portrays. Freedom is not meant for those select few, it is meant for everyone, including the film makers and authors and artisans, but of course without hurting others.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நேர்ல மகமாயி… படத்துல மிட்டாயி… நடிகையின் எக்குதப்பு போஸ்!

நாலு பாட்டு, மூணு ஃபைட்டு, ஒரு ரேப் சீன் இருந்தா அதுதான் கமர்ஷியல் படத்தின் ஃபார்முலா என்று கருதி வந்த தமிழ்சினிமா, மெல்ல மெல்ல கங்கையில் குளித்து...

Close