அன்றே சொன்னோம்… அதுதான் நடந்தது!
கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் பாலா இசைஞானி இளையராஜாவை சந்தித்தார் என்றும், பாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் மாற்றப்பட்டிருக்கிறார் என்றும் ஒரு செய்தியை நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். நம்மை தொடர்பு கொண்ட பாலாவின் உதவியாளர்கள் அந்த செய்தியில் உண்மையில்லை என்றும், மேற்படி செய்தியை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தியை நீக்கியும் இருந்தோம்.
தற்போது நமது செய்தியை உறுதிப்படுத்தும் விதத்தில் பாலா தரப்பிலிருந்து ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்தில் பாலா தன் அடுத்த படத்திற்கான இசை கோர்ப்பில் ஈடு பட்டிருக்கும் விஷுவல்கள் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆறே நாட்களில் 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இசைஞானி என்கிற தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாவின் ராட்சச வேகத்திற்கு முன் இதெல்லாம் கூட ஒன்றுமேயில்லை. நினைத்தால் ஒரு மணி நேரத்தில் கூட அவரால் இதை உருவாக்கிவிடவும் முடியும்.
அதுபோகட்டும்… இந்த நல்ல செய்தியை நாட்டுக்கு முதன் முதலாக தெரிவித்த நம்மிடம் ஏன் இல்லையென்று மறுத்தார்கள் என்பதுதான் இன்னமும் புரியவில்லை.
வீடியோ காண இங்கே க்ளிக்கவும் http://www.youtube.com/watch?v=lp5zFWp8soY
Video footage confirms our news on change of music composer
Few days ago we have reported in our website that director Bala has replaced music composer GV Prakash by Maestro Ilayaraja. However director’s office has communicated to us that the story is false and asked us to remove the story which we had done immediately.
However we have come across a video footage from director Bala’s office showcasing the deep discussion the director was having in tuning the songs. Also we hear that Ilayaraja has given songs composition for 12 songs in six days. We all know the talents, skills and knowledge Maestro has in music and it is no wonder. What we wonder is why we have been told to remove our earlier story which only has happened now going by the footage released!
Click here for the video link www.youtube.com/watch?v=lp5zFWp8soY