அப்படின்னா உங்கப்பன் யானையாடா? – இது தாய்லாந்து தடாலடி!

இந்த வாரம் 3D வாரம் போலிருக்கிறது. ஆனந்தவிகடனின் கண்ணாடி தந்த பிரமிப்பு மறைவதற்குள், அடுத்த கண்ணாடியை தந்தார்கள் ‘கும்கி வீரன்’ என்கிற டப்பிங் படத்திற்காக. (இப்படத்தின் ஒரிஜனல் பெயர் டாம் யம் கூங் 2) பொதுவாக இதுபோன்ற டப்பிங் படங்களின் வசனங்களுக்காகவும் லிப் மூவ்மென்டுக்காகவுமே அதை ரசிக்கலாம். இந்த படத்திலும் புன்னகையை தவழ விட்டது பெரும்பாலான வசனங்கள். இத்தனைக்கும் நமக்கு காண்பிக்கப்பட்டது வெறும் ஒன்றரை நிமிட காட்சிகள்தான். டீஸர்…!

யானை தந்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடத்தின் முன் நின்று கொண்டு, படத்தின் ஹீரோ டோனி ஜா, கணேசா… இன்னைக்குள்ள நீ எனக்கு கிடைச்சுரணும் என்று வேண்டுகிற காட்சி எம்ஜிஆரின் நல்லநேரம் படத்திற்கு ஒப்பானது. சமீபத்தில் வெளிவந்த கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் அப்படத்தின் ஹீரோவான யானைக்கும் ஒரு பாசப் பிணைப்பு இருக்கும். இப்படத்திலும் டோனி ஜாவுக்கும் அந்த யானைக்கும் ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கும் போலிருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கிற வில்லக் கூட்டம் யானையை கடத்தி, டோனி ஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போலிருக்கிறது.

அந்த யானை என்னோட அண்ணன்டா என்று டோனி ஜா முழங்க… அப்படின்னா உங்கப்பன் யானையாடா என்று வில்லன் கர்ஜிக்க… செம தமாஷ்! 3டி படமல்லவா? காட்சிகளிலும் ஃபைட்டுகளிலும் பிரமாண்டம் காண்பிக்கிறார்கள். க்ளைமாக்சில் வரும் இருபது நிமிட சேசிங் சீன் வேறு படங்களில் பார்த்திருக்கவே முடியாது என்றார் இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர். வீட்டுக்குள்ளே பிள்ளையாரையும் நாட்டுக்குள்ளே யானையையும் ரசிக்கிற தமிழர்கள் இருக்கிற வரைக்கும் கும்கிகளுக்கு தோல்வி ஏது? வாங்க டோனி ஜா…

Cashing in on Kumki name!

A Thailand 3D film is being dubbed and released in Tamil with title ‘Kumki Veeran’. Apparently the makers of the film wanted to cash in on the brand Kumki name for the film. Recently a teaser of the film was shown to the reporters. The film seems to have good sentiments attached to the hero and the elephant, as shown in Vikram Prabhu’s film Kumki. According to the producers it is a pure commercial film but with good sentiments, romance and fights, say a distributor of the film. Tony Ja plays the hero in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழகுராஜா ஊத்திக்கிச்சாம்… பார்ட்டி வைத்து கொண்டாடிய எதிர்கோஷ்டி!

பல மேடைகளில் பேசியாச்சு. ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை. ஆனால் பேசியவர்களே பேசியதை மறந்த கதை இந்த கோடம்பாக்கத்தில்தான் நிகழும். ஒரு காலத்தில் அஜீத் படம் பிளாப்...

Close