அப்படி செய்யலாமா தினேஷ்
ஒதிய மரம் வளர்ந்தாலும் உத்தரத்திற்கு ஆகாது என்பார்கள் கிராமத்தில். அப்படிதான் இருக்கும் போலிருக்கிறது ‘அட்டக்கத்தி’ தினேஷின் வளர்ச்சி.
அட்டக்கத்தி ஹிட்டுக்குப்பின் சுமார் அரை டஜன் தயாரிப்பாளர்கள் இவரை வட்டமடித்து வளைத்துப் போட துடித்துக் கொண்டிருக்கும் போது, கைநிறைய சம்பளத்தை காட்டி ‘வாராயோ வெண்ணிலவே’ என்ற படத்தில் நடிக்க கமிட் பண்ணினார்கள் இவரை. படப்பிடிப்புக்கு நல்லாதான் வந்துகிட்டு இருந்தாரு. ஆனால் நடுவில் ராஜுமுருகனின் ‘குக்கூ’ பட வாய்ப்பு கிடைத்ததும் ‘வாராயோ வெண்ணிலா’வை போவாயோ வெண்ணிலாவாக்கிவிட்டு ஃபுல் நேரமும் குக்கூவுக்கு போய்விட்டார்.
என்னென்னவோ பேசியும் கெஞ்சி பார்த்தும் தினேஷ் கால்ஷீட் கிடைத்தபாடில்லை. அதற்கப்புறம் நாலு பெரிய மனுஷன்களை வைத்து பஞ்சாயத்து பேசிதான் மீண்டும் நடுநடுவே நடிக்க வைத்துக் கொண்டிருந்தார்களாம். ‘தம்பிய கமிட் பண்ணினா கம்பிய கழுத்துல விட்டுகிட்ட மாதிரி… பார்த்து கவனமா இருங்க’ என்று வெப்பம் தெளிக்க ஆரம்பித்திருக்கிறது வெண்ணிலவு . தம்பி… உஷார்!
புதிதாய் வருகிற கதாநாயகர்களே இப்படித்தான். எல்லோரையும் சொல்லவில்லை, இது என் அனுபவம்.
படம் ஆரம்பிக்கும்போது காலில் விழுந்து கிடக்கும் இவர்கள், பாதிப்படம் வளரும்போது காண்பிக்கும் முகம் வேறு மாதிரியானது. ஏண்டா இந்த .. ..யை வைத்து படம் எடுத்தோம் என்று நொந்துபோகும் அளவுக்கு அராஜகம்.
இவர்களுக்கு மார்க்கெட்டில் வேல்யூவும் கிடையாது, ஆனாலும் அரிதாரம் படுத்தும் பாடு.
எனக்குத் தெரிந்து நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இந்த.. நொந்த மனநிலையில் இருக்கிறார்கள்.
திருந்துங்கள்.. இல்லையேல் காலம் கற்பிக்கும் கடினமான பாடம்!