அப்போ அம்பி… இப்போ ஹீரோ

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’.

முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இதில் கதாநாயகனாக பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ் நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அந்நியன் படத்தில் சிறு வயது ‘அம்பி’ விக்ரம் வேடத்தில் நடித்தவர். மேலும் சில படங்களில் சிறுவனாக நடித்து பாராட்டு பெற்றவர், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கவுரவ வேடத்தில் எஸ்.என்.சுரேந்தர் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.

நித்யன் கார்த்திக் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தம்பி’ சிவா நடனம் அமைக்க, ‘மிரட்டல்’ செல்வா சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக், இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். படத்தொகுப்பு வில்சி.

படம் பற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக, தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதை. அதை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன். ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன். பொழுதுபோக்கு அம்சம் உள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும்” இவ்வாறு தெரிவித்தார்.

Mozhivathu Yathenil is film based on ‘friendship’

Mozhivathu Yathenil directed by Gopalakrishnan has Viraj son of playback singer Surendran playing the hero. Viraj earlier acted as young ‘Vikram’ in Anniyan and as child artiste in few other films as well. He is debuting as hero with Mozhivathu Yathenil. The rest of the cast include, Rajan, Riyaz, Tej, Meenu Karthika, Lasya, Balu Anand, Theni Murugan and Anjalidevi. Singer Surender does a honorary role in the film.

Nithyan Karthik composes music for the film, which has Mirattal Siva doing the stunt choreography. Screen play and dialogues are jointly written by music composer Nithyan Karthik and director Gopalakrishnan.

Speaking about the film, the director said that the film is about two friends who sacrifice their lives for a friend who helped them from virtual death. He has told the story humorously with commercial ingredients. The film is a complete entertainer will be released soon, said director Gopalakrishnan.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் கார்த்தி ஜோடியாக தமன்னா இனிமே ராசி வொர்க்கவுட் ஆகுமாம்…

விரைவில் ‘உலகம் யாவையும் தமன்னாவாக்கலும்...’ என்று ஸ்லோகம் படிப்பார்கள் போலிருக்கிறது தமன்னா ரசிகர்கள். ஏனென்றால் ‘ ராசியான நடிகையாக்கும்... ’ என்பதை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்...

Close