அமலாபாலுக்கு 45 வயசு அதிர்ச்சி கிளப்பும் டைரக்டர்

படம் ரிலீசாகி இன்டர்வெல் வருவதற்குள் ‘படத்தின் சக்சஸ் மீட் இருக்கு, கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?’ என்று நிருபர்களை அழைத்து நெஞ்சுவலி கொடுக்கும் இயக்குனர்களை பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு, நிமிர்ந்து நில் ரிலீசாகி நியாயமான வசூலை எட்டியபின் வைக்கப்படுகிற சக்சஸ்மீட் சற்று ஆச்சர்யத்தையே கொடுத்தது. எடுத்த எடுப்பிலேயே ‘எல்லாருக்கும் நன்றி… நான் நினைச்சே பார்க்க முடியாத நட்பையெல்லாம் இந்த படம் ஏற்படுத்திக் கொடுத்துருக்கு’ என்றார் சமுத்திரக்கனி.

இந்த படம் லஞ்சத்திற்கு எதிரான படமல்லவா? பொதுவான ஒரு பிரபலத்திடம் இருந்து வந்த முதல் அழைப்பு சகாயம் ஐ.ஏ.எஸ்சிடமிருந்துதானாம். மதுரையில் கிரானைட் குவாரிக்காரர்களுக்கு சிம்ம சொப்பனாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர். ‘லஞ்சத்திற்கு எதிரா யார் குரல் கொடுத்தாலும், அவங்களுக்கு நான் சப்போர்ட். உங்க படம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்றாராம் அவர். வெளிநாட்டிலிருந்து பேசிய இன்னொரு பிரபலம், எந்நாளும் சிங்கமாக திரிந்து கொண்டிருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம். படத்தில் இவரை நினைவுபடுத்துவது மாதிரி ஒரு கேரக்டரை வடிவமைத்திருந்தார் சமுத்திரக்கனி. ‘படம் பார்த்தேன். என்னுடைய பாராட்டுகள்’ என்றாராம் தேவாரம்.

இப்படி சமுதாயத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்து பாராட்டுகள் குவிந்தாலும், இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ்வளவு பிரமாண்டமான படத்தை யோசிக்கக் கூட மாட்டேன் என்றார் சமுத்திரக்கனி. இந்த படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். அதனால் அடுத்த படம் ரொம்ப கூலா டென்ஷனே இல்லாம பண்ணப் போறேன். முழு கதையும் காட்ல நடக்குது. அமலாபால்தான் ஹீரோயின். என்னோட பொண்ணா நடிக்கிறாங்க. படத்தில் எனக்கு அஞ்சு கெட்டப். அவங்களுக்கும் பல கெட்டப் இருக்கு. நாற்பதைந்து வயசு லேடியாவும் நடிக்கிறாங்க என்றார் சமுத்திரக்கனி.

அந்த கேரக்டருக்கு மட்டும் அமலாபாலுக்கு மேக்கப் போடாம எடுப்பாரோ?

Amala Paul to appear as 45 years old in Samuthikani’s next film!

Samuthirakkani is very delighted at the success of his recent offering Nimirndhu Nil. The success meet of the film was held only after securing handsome collections at the Box Office. Speaking to the media, an elated Samuthirakkani said that he has been receiving appreciation and compliments from those in high office to common man. “I am really happy with the outcome of Nimirndhu Nil. Despite the appreciation and success of the film, I will not take up any big budget films for some time. Because I have endured much difficulty while making this film,” revealed the director.

He further said that he will be doing a cool film and the entire story happens inside the forest. “Amala Paul will play the female lead. She plays my daughter in the film. I have 5 different looks in the film, and Amala too will have many looks one of which will be a 45 year old woman,” divulged director Samuthirakkani.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
” Nimirnthu Nil” JeyamRavi Success Meet Stills

[nggallery id=362]

Close