அம்மாவோட வராதே… செல்போனை யூஸ் பண்ணாதே… ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ!

ஐதராபாத்ல செம குளிர்ப்பா… சீக்கிரம் சென்னையில ஷுட்டிங் வச்சா நல்லாயிருக்கும் என்று ட்விட்டரில் ஹன்சிகா நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரை மேலும் நடுங்க வைத்திருக்கிறது அந்த ஊர் படப்பிடிப்பு ஒன்று. அது எந்த படப்பிடிப்பு என்று சொல்வதற்கு முன் மோகன்பாபு பற்றி சொல்லிவிடுவது பின் வரும் சங்கதிக்கு வலு சேர்க்கும்.

தெலுங்கு சினிமா ஹீரோ ஹீரோயின்கள் அடிக்கிற கூத்துகளுக்கு முன்னால் நம்ம ஊர் கூத்துகள் எல்லாம் ஜுஜுபி. ஆனால் அந்த ஊர் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்பாபு பட ஷுட்டிங்கில் மட்டும் வாலு உள்ளிட்ட இதர சமாச்சாரங்களையும் அடக்கிக் கொண்டே நடிப்பார்கள் அத்தனை பேரும். அவர் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, தயாரிக்கும் படமாக இருந்தாலும் சரி. அரட்டை சவுண்ட் அறவே கேட்காது. செல்போன்கள் ஒலிக்கிற சப்தம் இருக்கவே இருக்காது. யாராவது செல்போனில் பேசியது தெரிந்தால் முதலில் ஸ்பாட் ஃபைன் போடுவாராம். அந்த வழக்கம் அதற்குப் பிறகும் தொடர்ந்தால் பலர் முன்னிலையில் அறை விழுமாம்.

படப்பிடிப்புக்கு லேட்டாக வந்தால் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஒருமுறை நடிகை சாக்ஷி லேட்டாக வந்து… அவரை மோகன்பாபு கன்னத்தில் பளரென அறைந்து… டோலிவுட்டே கிடுகிடுத்துப் போனது. சரி, விஷயத்துக்கு வருவோம். இவர் தற்போது ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோ…? இவரது மகன் விஷ்ணு. ஹீரோயின்? நம்ம ஹன்சிகா. தனது படப்பிடிப்புகள் எல்லாவற்றிலும் எந்நேரமும் செல்போனை நோண்டிக் கொண்டேயிருக்கும் ஹன்சிகா, இங்கு மட்டும் சகல அடாவடிகளையும் அடக்கிக் கொண்டே அமர்ந்திருக்கிறாராம். வழக்கமாக ஹன்சிகாவுடன் கூடவே ஒட்டிக் கொண்டு வரும் அம்மாவுக்கும் அனுமதியில்லை. அதனால் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

மோகன்பாபு காரு… கொஞ்சும் சென்னைக்கு வந்து நாலு தமிழ் படம் எடுங்களேன். ஒண்ணு நீங்க மாறணும். இல்லேன்னா அவங்க மாறணும்….

No cell phone, no mom for Hansika!

Mohan Babu is one actor who is a strict disciplinarian, be it as an actor or a producer. There are lot of disciplinary things that are to be followed whenever is around during the shooting spot. Those who violate will face penal action and those who continues to violate will face the flak from him. His shooting spots are best disciplined one, one can say it confidently. He is now producing a film in which his son Vishnu is the hero and Hansika is the heroine. She has been advised strictly not to come with mother to the shooting spot, as also not to use her cell phones when on the shooting floor. She is finding it difficult not to speak with any one on phone nor interact with her mother.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாட்டு வந்தது… பின்னாலேயே பணமும் வந்தது… விதார்த் பட விசேஷம்!

விதார்த்தின் அடுத்த ரிலீஸ் அஜீத்தின் ‘வீரம்’தான். மைனா வெற்றிக்கு பிறகு ராட்சத கழுகாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், மைனா தேய்ந்து எறும்பாகிப் போனதுதான் மிச்சம். இனி பொறுப்பதில்லை...

Close