அம்மா இருக்கும்போதே தாவணியை உருவுன சார்தானே நீங்க?

நாக்கால பேசுனா தமிழ், மூக்கால பேசுனா மலையாளம். ஆனால் ‘சேச்சி’ அனுகிருஷ்ணா பேச்சுல அப்படியே தமிழச்சி வாடை. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயினான அனு, இப்படி தமிழச்சியாகவே மாறிப் போன ரகசியம் என்ன?

அடப் போங்க சார். நான் திருவனந்தபுரத்துல பொறந்தவளா இருந்தாலும் சென்னையில வளர்ந்தவ. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல என்ஜினியரிங் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்களும் தமிழ்தானே. சுத்தமா மலையாள வாடையே விட்டுப் போச்சு என்றார். பக்கத்திலேயே இருக்கும் பாதுகாப்பு அதிகாரியான அம்மா, சுதந்திரமா இருக்கட்டும் என்று விலகிப் போன நேரம், விறுவிறுவென போட்டோ எடுக்க உத்தரவிட்டார் படத்தின் இயக்குனர் கஸாலி. (ஒவ்வொரு குடிமகனும் ‘அம்மா’வுக்கு அஞ்சிதானே ஆகணும்?) ஹீரோ ஆதர்ஷை கட்டிப்பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார் அனு. அம்மாதான் இல்லியே, சுதந்திரமா புடிங்க என்ற டைரக்டரிடம், அம்மா இருக்கும்போதே தாவணியை உருவுன சார்தானே நீங்க என்றார் அனு.

நமக்கு சொரேர் என்றது. என்ன சார் இது? உங்க கடைசி பொண்ணு வயசு இருக்குமா என்றோம் டைரக்டரிடம். கிரியேட்டருக்கு முன்னால வயசாவது ஒண்ணாவது. காட்சி அப்படி. குளத்தில் குளிக்கும்போது யாராவது தாவணிய கழட்டாம குளிப்பாங்களா என்றார்.

படம் ஓடணும்னா எதையாவது கழட்டிதானே ஆகணும்? என்று சமாளித்தவரிடம், இளைஞர் விழிநிறைக்குழு சார்பாக வாழ்த்துக்களை சொல்லிவிட்டு நடையை கட்டினோம்.

படம் எப்போ சார் ரிலீஸ்? அந்த குளிக்கிற சீன் எவ்ளோ நேரம் படத்துல வருது?

Read previous post:
அச்சடிச்ச காகிதம் அழி ரப்பருக்கு வணங்காது, ஆமாம்…

ஒரு நிறுவனத்திற்கு இருக்கிற கம்பீரம், ஒண்ணாந் தேதியானால் டாண் என்று சம்பளத்தை கொடுத்துவிடுவதுதான். ஆனால் சீரியல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பள விஷயத்தில் ‘நை’ என்றே இருக்கிறதாம்...

Close