‘அம்மா… காப்பாத்துங்க! ’ தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டிய அஞ்சலி…
தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டினால், கெட்ட கனவாக இருந்தாலும் கிட்ட வராது என்பதை சற்று காலம் கடந்து உணர்ந்து கொண்டிருக்கிறார் அஞ்சலி. சினிமாக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அந்தந்த நேரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் போய் ரகசியமாக அழுது புலம்பி காரியத்தை சாதித்துக் கொள்வது அவர்களது வாடிக்கை. கடந்த திமுக ஆட்சியிலும் இப்படி ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்தது கோபாலபுரம். அதுபோலவே இப்போது போயஸ் கார்டனுக்கும் மனுவை போட்டு விட்டு சந்திப்புக்காக காத்திருக்கிறார்கள் பலர்.
அந்த பலரில் ஒருவராக ஆவலோடு காத்திருக்கிறார் அஞ்சலி. பிரச்சனை, இவருக்கும் இவரது சித்திக்கும் மட்டுமல்ல. நடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு போன ஊர் சுற்றி புராணம் படத்தாலும் பிரச்சனை. அப்படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம் இவரை எப்படியாவது சென்னைக்கு வரவழைத்து நீதிமன்றத்தில் நிறுத்தி நஷ்ட ஈடு பெறாமல் விடுவதில்லை என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். சித்தியோ, அஞ்சலியின் வீட்டையே அபகரித்துவிட்டாராம். இதையெல்லாம் உடனடியாக சமாளித்து விட்டு சுதந்திரமாக சென்னையில் இருக்க ஆசைப்படுகிறார் அஞ்சலி. வயிற்றெரிச்சலை கிளப்புவது போல தமிழ் படங்களில் நடிக்கவும் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கிறதாம். என்னதான் செய்வார் அஞ்சலி?
வானமே புட்டுக் கொண்டு ஊற்றினாலும், கோவர்த்தன மலையை உயர்த்தி பிடிக்கிற அளவுக்கு ஸ்டிராங்கான கைகள் இருந்தால் அஞ்சலி போன்றவர்கள் நனைய தேவையில்லை அல்லவா? இப்போதைக்கு அப்படியொரு ஸ்டிராங்கான கை போயஸ்கார்டனில்தான் இருக்கிறது.
அஞ்சலியின் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைக்குமா?
Anjali seeks political intervention
It is common in any film industry to seek the political intervention if the affected party needs a solution to get on with the job. It is no different for Kollywood too. Earlier it was Gopalapuram which played the mediating role and solved many an issues. Now Poes Garden continues to do the same.
Among the umpteen number of applicants from Kollywood waiting for an audience from Poes Garden, Anjali is one of them. She is aggrieved the person, having lost her house to her foster mother, and facing legal tussle with director Kalanjiyam who bent on taking her to court and spoil her career. Besides these she also gets quite a number of offers from Kollywood to act but neither she could do it residing from elsewhere nor could she reside freely in Chennai. For all her problems, Anjali is badly in need of someone who can help her in getting out of the rut, and continue her career peacefully. Wise advisors seems to have suggested her to surrender to Poest garden, and she has now done that exactly and waiting for her time. Let us hope that her hurdles are cleared early.