“அரசியலில் பேய்கள்….” -போட்டுத்தாக்குகிறார் கமல்!

ஃபிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில் முக்கியமான சில கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் ‘ரொம்ம்ம்ம்ம்ப’ யோசிக்க வைக்கிற ரகம்.

‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிக்கல் வந்த போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்து கொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒருபோதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல ‘தலைவா’ படத்திற்கும் ஏற்பட்டது. அது பற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்?

அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைதானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்?

Kamal decimates unscrupulous politicians

Kamal who met the press recently in connection with the announcement of FICCI’s programme, did not hide his displeasure as he thrashed down today’s unscrupulous politicians. He said that he had made the statement of “leaving the country” in the wake of initial ban of “Vishwaroopam” earlier this year out of anguish as he was hurt. “I will not take back that word. It is like a mother’s love transforms as anguish. I am not in the business of crying it out in the open to either solve my problem or create a problem. People have been asking me questions regarding the problems Thalaivaa film faced, to fuel the fire. Politics is the best tool to construct the best possible civilised society. But some unscrupulous politicians do dirty things (which normally done by devils) in the name of politics.  If I am threatened or troubled again as an artiste, I can leave the country. But can the country leave me?” Kamal Haasan countered.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா – விமர்சனம்

‘ணங்....’ -இன்னாபா இது? விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு. அப்புடீன்னாக்கா படம் சோக்காதான் இருக்கும்னு நென்ச்சோம் பாரு, அதுல வுழுந்த கல்லுபா அது! அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் டைப்ல...

Close