அரசியலுக்கு வருகிறார் அஜீத்? இது நாடாளுமன்ற அசைன்மென்ட்

கும்மியடிச்சு அம்மிய நகர்த்த முடியும்னு தோணல…. ஆனாலும் அஜீத்தை அரசியலுக்கு இழுக்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் சில முக்கியஸ்தர்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாக இறங்கி பிரச்சாரம் செய்யாமல் தனது அப்பா எஸ்.ஏ.சி யின் மூலம் ஆதரவு தெரிவித்தார் விஜய். ஒரு அதிமுக பொதுக்கூட்டத்திலாவது அவரை பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அதிமுக தலைமைக்.கு கடைசிவரை ஏமாற்றத்தையே கொடுத்தார் விஜய். அதன் பலனை அவர் அதற்கப்புறம் அறுவடை செய்தார் என்பது வேறு விஷயம். ஆனால் எல்லா நேரத்திலும் மீன் பிடிக்க தயாராகவே இருக்கிறது அரசியல். அதில் சிக்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் நடிகர்கள்.

அந்த வரிசையில் அஜீத்திற்கு கொக்கி போட ஆரம்பித்திருக்கிறதாம் அதிமுக தலைமை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அஜீத்தை தமது கட்சிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையாவது கொடுக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் இப்போதைய அசைன்ட்மென்ட். சென்னை நகர மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியும் அஜீத்தும் நெருங்கிய நண்பர்கள். முதல் அம்பு வெற்றி மூலம் தொடுக்கப்பட்டிருக்கிறதாம். பழம் விழுகிறதா, இல்லை அம்பு விழுகிறதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் அஜீத் எப்போதுமே அதிமுக அனுதாபி என்பதால், இந்த அசைன்மென்ட் வெற்றிகரமாக முடியும் என்றும் உரத்த குரல் கேட்கிறது அரசியல் வட்டாரங்களில்.

Will Ajith enter politics?

During the recent assembly elections Vijay extended support to the ruling party through his father and avoided his presence in any of the election campaigns. He paid a heavy penalty for his stubbornness is another story.

Now the ruling party seems to be eyeing on Ajith who has a huge fan following and popular. A Message has been conveyed to him through Vetri, son of Chennai Mayor Duraisamy. The message is that Ajith has to issue a statement in support of the ruling party in the parliament elections.

Will Ajith fall into the trap? Your guess is as good as mine. However ruling party circles say that Ajith being a fan of party supremo, he may give his nod.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘நயன்தாராவுடன் சுத்தாதே…’ பேரன் உதயநிதிக்கு தாத்தாவின் அன்புக்கட்டளை

எலக்ஷன் வருது. ஒண்ணா சுத்தாதீங்க... இது தாத்தாவின் கட்டளை. ஒன்றாக சுற்றியது பேரன் உதயநிதி. கோவிலுக்கு போவதையே கூட ‘ஒண்ணா சுத்துவது’ என்கிற சீப் டோனில் பார்க்கிற...

Close