அரபு நாடுகளின் டாப் டென் கோடீஸ்வரர்கள்

உலக கோடீஸ்வரர்களை வரிசைப்படுத்தும் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த ஆண்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் உற்பத்தி நிறுவனமான ‘மைக்ரோ சாஃப்ட்’ அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த படியாக மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் 2–வது இடம் பிடித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ. 4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாகும்.

இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி 18.6 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் 40-வது பணக்காரராக உள்ளார். அவரது சகோதரர் அனில் அம்பானி 5 பில்லியன் டாலருடன் 281-வது இடத்தில் உள்ளார். லண்டன்வாழ் இந்தியத் தொழிலதிபர் லஷ்மி மிட்டல் 16.7 பில்லியன் டாலருடன் 52-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். உலகின் 26-வது பணக்காரர் என்ற இடத்தை கடந்த ஆண்டு பிடித்த சவுதி இளவரசர் அல்வாலித் பின் தலால் தற்போது 30-வது இடத்தில் உள்ளார்.

இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 20.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் நிலங்கள் மற்றும் வீடுகள், பங்குகள் ஆகியவற்றை வாங்கி விற்கும் நிறுவனத்தை நடச்த்த்டி வரும் இவர் கடந்த 2012-ம் ஆண்டில் 300 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய ‘டுவிட்டர்’ நிறுவன பங்குகளின் இன்றைய முக மதிப்பு 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக அரபு நாடுகளில் வசிக்கும் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளுக்கு உரிமையாளர்களின் (பில்லியனைய்ர்) பட்டியலை பார்ப்போம். ‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலின்படி, 61-வது இடத்தை பிடித்த சவுதி அரேபியாவின் பெட்ரோல் வர்த்தகர் முஹம்மது அல் அமவுதியின் சொத்து மதிப்பு 15.3 பில்லியன் டாலர்.எகிப்து நாட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் நசெஃப் சவுரிஸ் 6.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 205-வது இடத்தில் உள்ளார்.

4.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அப்துல்லா பின் அஹமத் அல் குரைர் 305-வது இடத்திலும், 4.5 பில்லியன்  டாலர் சொத்து மதிப்புடன் மஜித் அல் ஃபுட்டைம் 328-வது இடத்திலும், சவுதியின் இன்னொரு இளவரசரான சுல்தான் பின் முஹம்மத் பின் சவுத் அல் கபீர் 3.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 446-வது இடத்திலும்,  3.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் எகிப்தை சேர்ந்த முஹம்மது மன்சூர், லெபனானை சேர்ந்த நஜிப் மிக்காட்டி, அவரது சகோதரர் தாஹா மிக்காட்டி ஆகியோர் 520-வது இடத்திலும், 2.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் சைஃப் அல் குரைர் 609-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த டாப் டென் பட்டியலில் உள்ள அரபு நாட்டு கோடீஸ்வர்களின் மொத்த சொத்து மதிப்பு 67.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் செல்லும்

பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்த டி.சுப்பாராவ், கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியில் உள்ளார். ஆனால் இந்த...

Close