அராஜகர்களே… அடங்குங்கள்! பாலுமகேந்திராவின் ஆத்மா சொல்லும் செய்தி…

தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளுமைகளில் ஒருவரான பாலுமகேந்திராவின் உயிர் விடை பெற்று விட்ட இந்த தருணத்தில் பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகங்கள் பற்றி விளக்குவதும், விவாதிப்பதும் சரிதான் என்று தோன்றுகிறது. இதை பாலுமகேந்திராவின் ஆத்மா சொல்லும் செய்தி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளைத் திரையெல்லாம் நீதியும் நியாயமும் பேசுகிற திரைப்படங்களின் பின்னணியில் வேலை செய்கிற ஃபெப்ஸிக்காரங்களுக்கும் நீதி, நியாயம், நேர்மைக்கும் உள்ள தூரம்… சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை விட அதிகமாக இருக்கலாம். அவங்க பாஷையில நீதி, நியாயம், நேர்மைக்கெல்லாம், ரவுடியிஸம், சர்வாதிகாரம், அடாவடி, அராஜகம், வன்முறைன்னு வேற வேற பேரு இருக்கு.

அப்படி என்ன தான் சொல்றாங்க இந்த ஃபெப்சிக்காரங்க. கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

சினிமா சினிமான்னு ஒரு தொழில் இருக்கு. அதுல நிறைய வேலைகள் இருக்கு. சாப்பாடு போடுறதுல இருந்து சலவை செய்றது வரை… உடல் உழைப்பு வேலைகளும் இருக்கு. அதைவிட உசத்தியாக சொல்லப்படுற உக்கார்ந்து யோசிக்கிற வேலைகளும் இருக்கு.

இந்த வேலையை செய்றவங்க 24 வகையா இருக்காங்க. அதாவது லைட் மேன், ஆர்ட் அஸிஸ்டெண்ட, காஸ்ட்யூமர், மேக்கப் போடுறவங்க, டான்ஸ் ஆடுறவங்க இப்டி 24 வகை வேலை. அவங்க எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் இருக்கு. தனித்தனி சம்பளமும் இருக்கு. இந்த எல்லா சங்கமும் சேர்ந்த ஒரு சங்கம் தான் ஃபெப்ஸி. அதாவது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.

வழக்கம்போலவே எளியவர்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் இந்த சங்கமும். இந்த இந்த வேலை செய்றவங்களுக்கு இவ்ளோ சம்பளம் முடிவு செய்து நல்லா போயிக்கிட்டிருந்தது. ஆனா, இந்த எளியவர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு வலியவர்களான முதலாளிகள் பலருக்கு கிறுக்குப்பிடிக்க வச்சிருக்காங்க. வச்சிக்கிட்டே இருக்காங்க. எப்டி?

இந்த மாதிரி சினிமா சம்பந்தமான வேலைகளை செய்யும்போது அதுக்காகவே காத்துக்கிடக்கிற இவங்களை வச்சி தான் செய்யணும், அதே மாதிரி படம் வெளியாகுறதுக்கு முன்னாடி… இவங்க வேலை செஞ்சதுக்கான கூலியையும் கொடுத்துரணும் இதுதான் பல்லாண்டு கால நடைமுறை.

அதாவது 5 பேரு சேர்ந்து ஒரு இடத்துல சினிமா வேலை செஞ்சா, (உதாரணத்துக்கு எடிட்டிங்னு வச்சிக்குங்க) அவங்களுக்கு டீயும் சாப்பாடும் அவங்களா வாங்கிக்கக்கூடாது. இவங்க ஆள்களை வச்சித்தான் வாங்கணும். 5 பேருக்கும் ஒருநாள் டீ செலவும், சாப்பாட்டு செலவும் ஆயிரம் ருபா வந்துச்சுன்னா, அதை வாங்கிக்கொடுத்தவருக்கு 750 ருபாய்க்கு மேல ஒருநாள் சம்பளம் கொடுக்கணும். சரி, போகட்டும்னு எல்லாரும் அவங்களை அட்ஜஸ்ட் பண்ணித்தான் காலத்தை தள்ளுனாங்க. அதுக்கப்புறம் தான் ஹிட்லரையே மிஞ்சுற அளவுக்கு இவங்க மகா, மெகா மிரட்டல்லாம் பண்ண ஆரம்பிச்சாங்க.

எங்களுக்கு இவ்ளோ சம்பளம் தந்தே தீரணும்னு ஒரு பட்டியலை கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீட்டுனாங்க. இது புதிய சம்பள கொள்கைக்கான பட்டியலாம். அதுவரை இவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைஞ்ச தயாரிப்பாளர்கள், அதுக்கப்புறம் பெரிய கம்பியா நீட்டிட்டாங்க. சம்பள உயர்வும் கிடையாது, ஒண்ணும் கிடையாதுன்னு இவங்க முரண்டு பிடிக்க பெரிய களேபரம்.

உதாரணத்துக்கு திருநெல்வேலிப்பக்கம் தோப்பும் துரவுமா இருக்கிற ஒருத்தருக்கு, யாரோ ஒரு கோடம்பாக்கத்து புண்ணியவான் ஆசை காட்டப்போய் சினிமா எடுக்கலாம்னு நெனைச்சி சென்னைக்கு வரார். அவரோட தோட்டத்துல எல்லாமே வெளையுது. டெய்லி 100 பேருக்கு மேல சாயங்காலமானா அந்த அண்ணாச்சிக்கிட்ட சம்பளம் வாங்கிற அளவுக்கு வெவசாய வேலைக்காரங்க இருக்காங்க. பொங்கல் தீபாவளி மாதிரி நல்ல நாள் எதும் வந்திச்சின்னா, தென்னந்தோப்புல ஒரு ஓரமாக பெரிய அண்டாவுல ஊரு மொத்தத்துக்கும் சமையல், கோழிக்கறின்னு தடபுடல் தான்.

நம்ம ஊரு, தோப்பு இங்கயே படத்தை எடுத்துரலாம்னு நெனைக்கிறார் அவர். சரின்னு கௌம்புனா, இங்க சென்னையில இருந்து ஒரு கூட்டம் வராங்க. எல்லா வேலைக்கும் எங்க ஆட்கள் தான் வருவாங்க, அவங்கவங்களுக்கு தனித்தனி சம்பளம் இருக்கு. அதைக்கொடுத்தே ஆகணும். பட்டியல் நீண்டுகிட்டே போகும்.

எங்க ஆள்களை கூப்பிடாம நீங்க படம் எடுக்கக்கூடாது. எடுக்க முடியாதுன்னு ஊருல கட்டப்பஞ்சாயத்து பண்ற அண்ணாச்சிக்கே கண்ணுல தண்ணி கொட்டுற அளவுக்கு இவங்க கொடுப்பாங்க டார்ச்சர்… பாவம் அவர் குழம்பிப்போய் போன பணம் போகட்டும், இனிமே சினிமாவே வேண்டாம்னு நடுத்தோப்புக்குள்ள நாற்காலி போட்டு உக்கார்ந்து விவசாயத்துக்கே திரும்பி போயிருவார். ஏன்னா, எதிர்த்துக் கேட்க முடியாதே.

அய்யா அவர் கிட்ட தோப்பு இருக்கு, அரிசி இருக்கு, பாத்திரம் இருக்கு, சமைக்கவும் பரிமாறவும் ஆள்களும் இருக்காங்க. அட அவ்வளவு ஏங்க… தீப்பெட்டியும் அதைக்கொளுத்தி அடுப்பு பத்தவைக்க தெரிஞ்சவங்களும் இருக்காங்க. அப்புறம் நீங்க தான் வந்து அடுப்பு பத்தவைக்கணும்னு எதுவும் சட்டம், கிட்டம் இருக்கா என்ன?

வேலை செய்றவங்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சாப்பாடு போட்டுக்கிறார், சம்பளம் குடுத்துக்கிறார்…. நாங்க தான் வருவோம், நாங்க கேட்கிற சம்பளத்தை தந்தே தீரணும்னு சொல்றதெல்லாம் எந்த ஊரு நியாயமய்யா…?

சரி அவங்க ரூட்ல போயே சொல்வோம்,

கஷ்டப்பாடு பட்டு ஒரு பொண்ணை பார்த்து கடன் கிடன் வாங்கி நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டீங்க. ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்படுறீங்க. அந்தக்குழந்தை தான் ஒரு சினிமான்னு வச்சிப்போம்.

அந்தக்குழந்தையை உங்க வருமானத்துக்கு ஏற்ற தரமான மருத்துவமனையில் மனைவியை சேர்த்து பெத்துக்க வைப்பீங்க. அப்புறம் உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி, வீடு, உணவு, உடை, உறைவிடம் அந்தக் குழந்தைக்கு ஏற்பாடு செய்வீங்க. அப்புறம் ஸ்கூல், படிப்பு எல்லாமே உங்க வருமானத்துக்கும் விருப்பத்துக்கும் சௌகர்யத்துக்கும் உட்பட்டு உங்களால முடிஞ்சதை செய்வீங்க. எல்லாரும் அதைத்தான் செய்வாங்க.

இப்ப உங்க கிட்ட ஒரு கூட்டம் வந்து, உங்க மனைவியை கண்டிப்பா இந்த மருத்துவமனையில தான் சேர்க்கணும். எங்க சார்பாக நாலு நர்சுகள் வருவாங்க. ஆளுக்கு ரெண்டாயிரம் கொடுத்துரணும். அதுக்கப்புறம் குழந்தை பிறந்த பின்னாடி வீட்டுக்கு கூட்டிட்டு போறது எங்க கார்ல தான் கூட்டிட்டு போகணும். அதுக்கு எங்க ஆளுதான் டிரைவரா வருவாரு. காருக்கும், டிரைவருக்கும் சேர்த்து இத்தனை ஆயிரம் தந்துரணும். வேற பிரைவேட்ல கார், ஆட்டோ பிடிச்சீங்க உங்க குழந்தை அம்புட்டு தான்னு சொல்றாங்க. பொண்டாட்டி குளிக்கிறதுக்கு வெந்நீர், குழந்தையை குளிப்பாட்டுறதுக்கெல்லாம் வேற வேற சம்பளம் இருக்குன்னு சொல்றாங்க.

அதோட விட்டா பரவாயில்லையே, குழந்தை வளர்ந்த உடனே கண்டிப்பா நாங்க சொல்ற பள்ளிக்கூடத்துல தான் சேர்க்கணும். இவ்ளோ ஃபீஸ்னு நாங்களாவே ஃபிக்ஸ் பண்ணிருக்கோம். உங்களுக்கு வேற சாய்ஸே கிடையாது. நாங்க சொல்ற ஃபீஸை கட்டியே ஆகணும். நாங்க சொல்ற ஸ்கூல்ல தான் படிக்க வச்சாகணும். டெய்லி எங்க ஆள்கள் டிரைவரா இருக்குற கார்ல தான் வந்தாகணும். மீறி போனிங்கன்னா… உங்க குழந்தையை படிக்கவே விடமாட்டோம்னு நாக்கை துருத்திக்கிட்டு உங்க கிட்ட யாராவது வந்து நின்னா விடுவீங்களா?

ஆசையிலயோ, அல்லது ஆர்வத்திலயோ, அல்லது கலை தாகத்துலயோ பணத்தை போட்டு சினிமா எடுக்க வரவங்களுக்கு அந்த சினிமா அவங்க குழந்தை மாதிரி தான். முக்கியமான விஷயம், அந்த குழந்தை அவங்களோட குழந்தை. அந்தக் குழந்தைக்கு பேர் வைக்கவும் குளிப்பாட்டி விடவும் டிரெஸ் போட்டு விடவும் அவங்களுக்கு தெரியும். அல்லது குளிப்பாட்டாமலே கூட விடுறாங்க? நீங்க வந்து நாங்க தான் செய்வோம்னு மல்லுக்கட்டுறது எந்த வகை நியாயம்?

சரி, வயித்துப்பொழைப்பு, எங்களுக்கு வேற தொழில் தெரியாதுன்னு நீங்க செண்டிமெண்டலா சொன்னாலும், உலகத்துல யாருக்குத்தான் வயிறு இல்ல, யாருக்குத்தான் பொண்டாட்டி, புள்ள இல்ல. வாழ்க்கை இல்ல. அவ்ளோ பெரிய பில்டிங் கட்ட எவ்ளோ பேரு உழைக்கிறாங்க… அவங்க எல்லாம் இப்படிதான் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்களா?, சாக்கடை சுத்தம் பண்றவங்களில் ஆரம்பிச்சு, வயித்துக்கு சோறு போடுற விவசாய வேலை செஞ்சி படாத படுறவங்க நாட்டுல எவ்ளோ பேர் இருக்காங்க. அப்டி பார்த்தா, அவங்க செய்ற வேலையை விட, நீங்க செய்ற வேலை ஒண்ணும் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் வேலையில்லை. அப்டி உங்களுக்கு பொழப்பு பிரச்சினைன்னா அரசாங்கத்துக்கிட்ட போயி நில்லுங்க. மாற்றுத் தொழில் செய்ங்க. வேற வேலை கேளுங்க. அதை விட்டுட்டு அடிதடி, அடாவடி, மிரட்டல்னு செய்றதெல்லாம் கற்காலத்துல கூட நியாயமா இருந்திருக்க வாய்ப்பே இல்ல.

அவனவன், கிராமம் கிராமமா ஷார்ட் பிலிம் எடுக்கிற காலம் இது. ஐ போன்லயும் ஸ்மார்ட் போன்லயும் படம் எடுத்து கொட்டாம்பட்டில இருந்து குளத்துப்பட்டி வரை அவனவன் மொபைல்ல அம்பது ஷார்ட் பிலிம் வச்சிக்கிட்டு திரியிற டிஜிட்டல் யுகம் இது. ஒரு கிராமத்துக்கு அம்பது டைரக்டர் வந்துட்டாங்க. அவங்களே படம் எடுத்து அவங்களே மச்சான் மாமன் மச்சினி கூட உட்கார்ந்து பாத்துக்கிறாங்க. விரைவில் அவங்களுக்கும் டெக்னாலஜி தெரிஞ்சி அவங்க அவங்க எடுக்கிற சினிமாக்களை அவங்க ஊர் தியேட்டர்ல மட்டும் அவங்களே ஸ்கீரின் பண்ணிக்க போறாங்க. மாவட்ட சினிமா, தாலுகா சினிமா, நகர சினிமா, வட்ட சினிமா, பஞ்சாயத்து சினிமா, வார்டு சினிமான்னு… அங்கங்க சினிமா எடுத்து அங்கங்க வெளியிடுவதும் வியாபாரம் பண்றதும் விரைவில் வரப்போகுது.

உங்க ஆர்வக் கோளாறுல நீங்க கௌம்பி போயி, ஐபோன் காரனையும், ஸ்மார்ட் போன் காரனையும், ரெட் கேமராக்காரனையும் மிரட்டுனாலும் ஆச்சர்யம் இல்ல.

இளையராசாவும், விஜயசேதுபதியும் தேவைன்னா சினிமா எவ்வளவு விலை கொடுத்து வேணா அவங்களோட திறமையை வாங்கும். அதே நேரம் இன்னொரு பக்கம் என் திறமைக்கு ஒரு வாய்ப்பு தாங்க, அப்டி வாய்ப்பு தரதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்னு சொல்லி வரிசைக்கட்டி நிக்குற கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்குதுங்கிறது நீங்க அறியாத சங்கதியும் இல்ல.

திறமைக்காரன் எங்க இருந்தாலும் அவனுக்கு மரியாதை கண்டிப்பா இருக்கும், அவன் திறமைக்கு தேவையும் இருக்கும்.

மற்றபடி உலகத்தின் எந்த சட்டத்திலும் நியாயம் என்று சொல்ல முடியாத, எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடியாகாத உங்கள் சட்ட திட்டங்களையும் கட்ட பஞ்சாயத்துக்களையும் மூட்டை கட்டி விட்டு அனைவரும் ஏற்றுக்கொள்கிற அடுத்த கட்டத்தைப்பற்றி ஆரோக்கியமாக யோசிக்கவேண்டிய நேரமிது என்பதை உணருங்கள்.

பின்குறிப்பு- இந்த கட்டுரைக்கும் பாலுமகேந்திராவுக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு சின்ன தகவல். இந்த பெப்ஸிகாரங்களோட அராஜகம் முதன் முதல்ல ஆரம்பிச்சது பாலுமகேந்திராவின் ஷுட்டிங்லதான். ஒரு டைரக்டர் சொல்ல வேண்டிய பேக்கப் என்ற வார்த்தையை அப்போது பெப்ஸி தலைவரா இருந்த விஜயன் சொல்லி பாலுமகேந்திராவின் ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தினார். அதற்கப்புறம் ஆறு மாசம் தமிழ்சினிமாவே ஸ்ட்ரைக்கால முடங்கிப் போச்சு. அப்போதும் இப்போ இருக்கிற முதல்வரம்மாதான் முதல்வரா இருந்தாங்க. பாவம் பார்த்து பெப்ஸி ஊழியர்களுக்கு அரசாங்கமே கஞ்சி ஊத்துச்சு. அதுக்கப்புறம் பல காலம் வாலை சுருட்டிகிட்டு கிடந்தவங்களுக்கு இப்போ மறுபடியும் பொத்துகிட்டு வருது கோவமும், ஆத்திரமும்…

அந்த ஆத்திரம் நியாயமா இருந்தா அரசாங்கம் என்ன, பொதுமக்களே கஞ்சி ஊத்துவாங்க. இல்லேன்னா அரசாங்கம் கூட அதுக்கு தயாரா இருக்காது. புரிஞ்சுக்கோங்க!

இப்படிக்கு,

பெப்ஸியால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபட தயாரிப்பாளன்

Time for FEFSI to reinvent itself!

Of late, FEFSI is everywhere for the wrong reasons with loads of disturbing news emanating owing to its transient culture. In order to avoid falling into the pit which was dug by itself, we suggest a rationale thinking and approach to reinvent itself will bring back its lost glory. Will it be able to do is for its administrators to answer.

FEFSI is the amalgamation of various small unions – light boys, catering, costumers, make-up men, so on and so forth – which was formed primarily to help their members to get their due in case of non compliance.  They also act as tribunal whenever there is disagreement between parties – mainly film makers and employees. It appears the very purpose of the formation of FEFSI is misunderstood by those at the helm and they think they could do anything done by atrocity, arrogance and goondaism. Honesty and justice are given a go-by by the members now who wanted to show their high handedness in everything.

Cinema is union of various categories of artisans from actors to light boys to everything that involves in film making. Most people work with their body and some work with mind. The efforts, put in by the physique and mind are incomparable for a remunerative structure.

The other most important factor FEFSI thinks it is superior is that they are indispensable in Cinema making. Yes, they are important part of cinema making no doubt. But that does not give them to demand they are the virtue and without them the cinema should not move is hypocrisy. A talented person who wants to make use of his talents and wanted to make it big and fame in Cinema is being bullied in to retrace his steps. Not only is he disillusioned about cinema, but a talent instead of nurturing is gone waste by the arrogance shown.

When a producer with everything at his command wanted to produce a film who can stop him in doing it. Can he not employ his own troupe of people in the film making? No Indian law prohibits such a scenario. The basic principle of law is ‘live and let live’. If FEFSI insists that people who wanted to produce film should use their men only and at the price they quote, it is nothing but arrogance and ignorance as well. When some brainy person goes to court and complains that FEFSI is thwarting his attempts to produce a film on his own with his people, court cannot come to be aid of FEFSI. There is no obligation on any one that FEFSI alone is to be used for making films. The court may not come to the rescue of FEFSI or its members.

It is your right to fight for your rights provided your employers do injustice to you. But you cannot demand that the employers should employ them only for the salary you determine. Since the same is right is applicable to producers and others too, that they can determine who to employ and what salary they can give depending on the quality of workmanship they employ.

Instead of creating an atmosphere of give and take cultivating ‘might is right’ atmosphere will only bring hardship more upon us, than on others. If we wanted to make filmdom flourish and help feed millions of workers like us, then it is our basic duty to nurture an atmosphere conducive to for every one of us to thrive.

It is not our intention to cast aspersion on the entire FEFSI community but like everywhere some disgruntled elements will always be there to spoil the spirit of living. It is the responsibility of those who administer it to identify and remove such unwanted elements for good future.

If FEFSI does it, everyone will come to your support irrespective of how big are your opponents.

Since FEFSI’s atrocity started in the shoot of the departed veteran director Balu Mahendra, we thought it would be apt to remind that any good corrective measure taken by FEFSI at this hour will be a true tribute to the departed soul.

4 Comments
  1. manni maindhan says

    அநியாயங்களுக்கு இவ்வுலகில் தீர்வு கிடைக்காவிட்டாலும் மறுமையில் நிச்சயம் தீர்வு கிடைக்க உள்ளது. அந்த நாளை எல்லோரும் பயந்து கொள்ளுங்கள்
    http://quranmalar.blogspot.com/2013/10/blog-post.html

  2. mohamed kasim says

    எந்த அநீதிகளும் கண்டிப்பாக உரிய முறையில் தண்டிக்கப்பட உள்ளன. அதற்குதான் இறுதித்தீர்ப்பு நாள் என்று ஒன்று உள்ளது. http://quranmalar.blogspot.in/2013/10/blog-post.html

  3. Ghazali says

    மிக அருமையான, தற்போது தேவையான பதிவு. அனைவருக்கும் முடிந்த அளவு ஷேர் செய்தால் வருங்காலத்தில் சினிமா பிழைத்துக்கொள்ளும்.

  4. பிம்பிடிக்கி பிளாப்பி says

    // அப்போதும் இப்போ இருக்கிற முதல்வரம்மாதான் முதல்வரா இருந்தாங்க. பாவம் பார்த்து பெப்ஸி ஊழியர்களுக்கு அரசாங்கமே கஞ்சி ஊத்துச்சு. //

    தவறான தகவல் ராமன் அப்துல்லா படம் சமயம், கருணாநிதி தான் அப்போது முதல்வர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மௌனியின் பேரன்பு – பாலுமகேந்திராவின் பேட்டியிலிருந்து…

மௌனிகாவும் என் மனைவி தான்! பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம் அமரர் ஆகிவிட்டார் பாலுமகேந்திரா. அவரது உடலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கும் அவரது ஆன்மா. ஆனால் அந்த ஆன்மா...

Close