அரை பட்டினி ஐஸ்வர்யா… நொறுக்குத்தீனி காயத்ரி…

மோனலிசா ஓவியம் மாதிரி எந்த பக்கம் நின்று பார்த்தாலும் ஏதோவொரு அழகையோ, அல்லது அழுகையையோ தருகிற முகம் காயத்ரிக்கு. இன்னமும் ஒரு அறிமுக நடிகை லெவலிலேயே அவர் இருந்தாலும், அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துவிட்டதுதான் காயத்ரியின் சாதனை. இருந்தாலும் ‘ரம்மி’ திரைப்படம் அவரது வாழ்வில் ரம்மியமாக அமையும் போல் தெரிகிறது.

‘இந்த படத்துல நடிக்கணும்னு என்னை நேர்ல பார்க்க வந்திருந்தார் டைரக்டர் பாலகிருஷ்ணன். வில்லேஜ் கதையை அவர் சொல்ல ஆரம்பிச்சதுமே நான் அப்செட். ஏன்னா என் ஃபேஸ்கட்டுக்கு வில்லேஜ் கேரக்டர் செட்டாவுமான்னு யோசிச்சேன். ஆனால் கதையை முழுசா கேட்டதும் இந்த படத்தை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சி’ என்றார் காயத்ரி. பக்கத்திலேயே இருந்த பாலகிருஷ்ணன், ‘நான் காயுகிட்ட (இப்படிதான் செல்லமாக உச்சரிக்கிறார் பாலு) கதை சொல்லப் போனப்போ, அது வாயில போட்டு எதையோ மென்னுகிட்டே கதை கேட்டுச்சு. எந்த நேரம் பார்த்தாலும் அது எதையாவது தின்னுகிட்டேயிருக்கும். என்னடா இவ்வளவு அலட்சியமா கதை கேட்குதேன்னு நினைச்சேன். பட்…’

‘ஷுட்டிங் ஸ்பாட்டுல வந்து நின்னதும் அதோட டெடிக்கேஷனே வேறயாகிடுச்சு. எக்ஸ்பிரஷன்ஸ் அவ்வளவு அருமை’ என்று பாராட்டினார் பாலகிருஷ்ணன். டைரக்டர் லிங்குசாமியிடம் ஆனந்தம் படத்திலிருந்து லேட்டஸ்ட் படம் வரை தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர் இவர். ரம்மி ட்ரெய்லரை பார்த்துவிட்டு அப்படி அசந்து போனாராம் லிங்குசாமி.

விஜய்சேதுபதியும், இனிகோ பிரபாகரும்தான் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்கள். விஜய் சேதுபதியோட உயரம் இன்னைக்கு வேற. இவ்வளவு பெரிய ஆளாகிட்ட பிறகும் அவர் எனக்காக கொடுத்த ஸ்பேஸ் ஆச்சர்யமானது. அந்த மனசு அவருக்குதான் வரும் என்று மனதார பாராட்டினார் இனிகோ.

அட்டக்கத்தி ஹீரோயின்களில் ஒருவரான ஐஸ்வர்யா இதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். வளர்ந்து வர்ற நேரத்தில் நாலு வார்த்தை கூடுதலா பேசுனாதான் பிரஸ்சுல எதையாவது எழுதுவாங்க என்கிற உண்மையை அவரிடம் யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. பொண்ணு அளவா பேசி அளவா சிரிச்சு அளவு சாப்பாடு மாதிரியே அரை பட்டினி போட்டுட்டு போவுது…

Director Balakrishnan of Rummay praise Gayathri’s dedication

Gayathri is not new to Kollywood as she had done about half a dozen films here, before she has been promoted to play one of the leads in Rummy. Balakrishnan the director of the film praised Gayathri’s dedication during the shoots. He said when he approached Gayathri to play one of the leads in the film, she was munching something and listening the script casually. Nevertheless when she visited the shooting spot, she was dedication personified. Her focus and concentration to the minute details and delivering the scenes with desired expressions were exemplary, said Balu. Gayathri said that she was little upset when Balu sir told me it is a village subject, but after hearing the story she was more inclined to do the role herself and gave him the consent.

Inego Prabhakar and Vijay Sethupathi are the two heroes in the film which will be a romantic comedy. Prabhakar says Vijay despite his success and fame was great having agreed to play the lead with a new comer like him.

Aishwarya who played one of the leads in Attakathi, is the other heroine in the film, but she did not speak anything either on the film or about her character – a strange act for an upcoming artiste.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இப்போதைக்கு அமைதிதான் என்னோட பதில்! – கவுதம்மேனன்

அனில் அம்பானியாகவே இருந்தாலும், அமிஞ்சிக்கரை சேட்டிடம் டூவீலர் லோனுக்கு நிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால் மாற்ற இயலும்? அப்படிதான் ஆகிவிட்டது கவுதம் மேனனின் நிலைமை. இவரது...

Close