அறிக்கைக்குப் பின் சூர்யாவை சந்தித்த கவுதம்!

கவுதம்மேனனும் சூர்யாவும் கட்டி உருளப் போகிறார்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உண்மை அதுவல்ல. சூர்யாவுக்கு எதிரா ஒரு அறிக்கை ஒண்ணு கொடுத்துரலாமா என்று சில ‘நல்லவர்கள் ’ கவுதமை உசுப்பிவிட, ‘அதெல்லாம் வேணாங்க’ என்று கூறிவிட்டாராம் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால், சூர்யாவின் அறிக்கை வந்த மறுநாளே கவுதம் சூர்யா வீட்டுக்கு சென்றதுதான்.

வழக்கம் போல இவரை வரவேற்று உபசரித்தார்களாம் வீட்டில். இந்த அறிக்கை வெளியிடும் போதே கவுதமுக்கு ஏதாவது செய்யணும் என்று கூறி வந்தாராம் சூர்யா. தனது தரப்பிலிருந்து அவர் ஏதாவது பண உதவி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று சினிமாவுலக புள்ளிகளிடமும், சூர்யாவுக்கு நெருக்கமானவர்களிடமும் கேட்டால் வருகிற பதில் ஷாக் ரகம்.

இவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனர் கஷ்டப்படுகிறார் என்பதற்காக கவலைப்பட்டாராம் சூர்யா. அவர் தன்னிடம் தொடர்ந்து கால்ஷீட் கேட்டு வருவதை மனதில் வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அவரையே வீட்டுக்கு வரவழைத்த சூர்யா, இப்ப இருக்கிற ட்ரென்டுக்கு உங்களுக்கு என்னால் கால்ஷீட் தர முடியாது. ஆனால் வச்சுக்குங்க என்று பெரிய தொகை ஒன்றை வழங்கினாராம். கிட்டதட்ட ஒன் சி என்கிறது அந்த நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

சூர்யாவின் கால்ஷீட்டே தேவையில்ல, ஆனால் தேவைன்னு கேட்டாலே அதிர்ஷ்டம் அடிக்கும் போலிருக்கே!

Gautham Menon meets Suriya

 

When it was expected that storm will blow out in Kollywood due to the recent presss release of Suriya walking out of Gautham’s project, it came as a pleasant surprise to many as Gautham Menon visited Suriya’s house, on the very next day the release was published. Earlier Gautham also advised his friends and well wishers not to issue any rejoinder or response to Suriya. It is reliably learnt from sources that Suriya felt sad when one of the directors who has made his known, is suffering financially, and wanted to help him. It is said that he had called the director concerned to his home, and explained him that it would not be possible to give call sheet to the director, under the present conditions. Along with the explanation, Suriya also did give a lump sum (sources say it is around 1.c) as his personal help to the director.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முன்னே வி.டி.வி கணேஷ், இப்போ சந்தானம்… – ஏமாறுகிறாரா சிம்பு?

சிம்பு கட்டியிருக்கிற வீட்டுக்கு அவரே ‘கெஸ்ட் ஹவுஸ்’னு பேர் வச்சாலும் ஆச்சர்யமில்ல. ஏனென்றால் மெயின் ஹீரோவான அவரை தாஜா பண்ணி தாஜா பண்ணி கெஸ்ட் ரோலில் நடிக்க...

Close