அழகுராஜாவில் ட்வென்ட்டி மினிட்ஸ் வெட்டு?

 

காய்ஞ்சுப்போன பன்னுக்கு எவ்வளவுதான் டெகரெஷன் செய்தாலும் அது பிறந்த நாள் கேக் ஆகிவிடாது. இப்படியொரு அபத்த களஞ்சியமான விமர்சனத்தை ரிலீசுக்கு முன்பு வரை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ஆல் இன் ஆல் குழுவினர். படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே இந்த படத்தின் மீது சற்றும் நாட்டமில்லாமல் இருந்தார்களாம் கார்த்தி அன் பிரதர்ஸ். ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சூர்யாவுக்கு ஆல் இன் ஆல் காட்டப்பட, எவ்வித கருத்தும் சொல்லாமலேயே அரங்கத்தை விட்டு வெளியே சென்றாராம் அவர்.

அவரது ரியாக்ஷன்தான் படத்தின் ஒட்டுமொத்த ரிசல்ட் என்கிறது ஊரும் உலகமும். இருந்தாலும் கொட்டிய பணத்தையும் சிந்திய வியர்வையையும் சும்மா எடுத்துக் கொள்ள முடியாதே? படத்தை நஷ்டமில்லாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமையும் இருக்கிறதல்லவா? படத்தில் ஜவ்வான காட்சிகளை வெட்டி விடலாம் என்று இப்போது தீர்மானித்திருக்கிறார்களாம்.

தற்போது சுமார் இருபது நிமிட காட்சிகள் படத்திலிருந்து வெட்டப்பட்டிருக்கிறது. அதற்கப்புறம் எப்படியோ? படத்தின் ஒட்டுமொத்த சலிப்புகளால் கார்த்தி பாதிக்கப்பட்டாரோ, இல்லையோ? காஜலுக்கு செமத்தியான மூட் அவுட்! துப்பாக்கியின் வெற்றியை அழகுராஜா காலி பண்ணிவிட்டாரே என்பதுதான் அவரது கவலை. இனிமேல் சம்பளத்தை ஏத்தவும் முடியாது. குறைக்கவும் மனசு வராது. அதற்கு காரணமானவர்கள் மீது கோபம் வரத்தானே செய்யும்?

All in All Azhagu Raja trimmed!

When Karthi starrer All in All Azhagu Raja was shown in a special screening to Suriya, he has not expressed any opinion on the film, which was an indicator to the makers of AAAR. Soon all out promotional activities have been put in place to make the film saleable to audience. However the reactions from the audience were damp squib, right from FDFS onwards. To thwart further down slide, the makers of the film, have now trimmed the length of film by 20-25 minutes, deleting a song sequence and some unwanted scenes. The trimmed version of the film was put in to effect from yesterday, viz., 4th Nov. However the audience reaction remained the same, according to theatrical sources.

 

The outcome of the film has damaged the prospects of Kajal, who was enjoying the success of Thuppakki till AAAR was released. Now she has to wait till Jilla’s release, not only to redeem her lost image but also on future prospects too!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சொத்துப் பிரச்சனை …? – பொலிட்டீஷியனை சந்தித்து புலம்பிய ஹீரோ?

    சமீபத்தில் வந்து பெரும் ஹிட்டடித்த படத்தின் ஹீரோவுக்கு தல போகிற பிரச்சனை ஒன்று. தனது சொந்த மாநிலமான கேரளாவில் பெரிய தோட்டம் ஒன்றை வாங்கினாராம்....

Close