அழகுராஜா ஊத்திக்கிச்சாம்… பார்ட்டி வைத்து கொண்டாடிய எதிர்கோஷ்டி!

பல மேடைகளில் பேசியாச்சு. ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை. ஆனால் பேசியவர்களே பேசியதை மறந்த கதை இந்த கோடம்பாக்கத்தில்தான் நிகழும். ஒரு காலத்தில் அஜீத் படம் பிளாப் ஆகிவிட்டால் விஜய் பட ரசிகர்கள் ட்ரீட் தருவார்கள். விஜய் படம் மொக்கையானால் அஜீத் ரசிகர்களுக்கு ஆனந்தம். பார்ட்டி, ட்ரிட் என்று அமர்க்களப்படுத்துவார்கள். ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டிருந்த வியாதி அப்படியே சம்பந்தப்பட்ட நடிகர்களையும் பிடித்து ஆட்டத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சாயங்காலமே இப்படிப்பட்ட பார்ட்டிகளை கொடுத்து திக்குமுக்காட வைக்கும் ஹீரோக்களும் இயக்குனர்களும் கோடம்பாக்கத்தில் பெருகிவருவதுதான் பேராபத்திலும் பேராபத்து.

இங்க ஒரு படம் ஓடலேன்னா இன்னொரு குரூப் பார்ட்டி வைக்குது. இந்த கலாச்சாரம் மாறணும். அப்பதான் தமிழ்சினிமா உருப்படும் என்றெல்லாம் ஏதாவது ஒரு இசை வெளியீட்டு விழா மேடையில் கொதித்து கொந்தளித்துவிட்டு போகிற பல இயக்குனர்கள், மிக சமீபத்தில் தோல்விப்படம் கொடுத்தவர்களாக இருப்பார்கள். அதுவே இன்னொரு படம் ஊத்திக் கொண்டால் முதல் ஆளாக பாட்டிலை ஓப்பன் பண்ணி, கா…. கா… என்று சவுண்ட் கொடுத்து சக நண்பர்களை அழைப்பதும் இவர்களாகதான் இருக்கும்.

இது நமக்கு கிடைத்த அண்மை செய்தி. ஆல் இன் ஆல் அழகுராஜா ரிசல்ட்டை முதல்நாளே அறிந்து கொண்ட இயக்குனர் ஒருவர், அன்றிரவே பார்ட்டி வைத்தாராம். இதில் அவருடைய நண்பர்கள் பலரும், ஆ.இ.அ.ராசாவுக்கு வேண்டப்படாத பலரும் கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த படத்தின் டைரக்டரும் கலந்து கொண்டதாக வந்த தகவல்தான். சே….சே… அப்படியெல்லாமா இருக்கும்?

CELEBRATING A ‘FAILURE’ IS NOT INDIAN CULTURE

It is very agonising and disturbing when a person’s failure is celebrated as a victory by the opponents. Victory and Failure come and go, but humane stays forever and speaks forever. It is more irritating and makes one feel sad, more because the very people, who showcase such unethical acts in their films, practise it in their real life. Right from the days of MK Thyagaraja Baghavathar and SG Kittappa time, till Vijay and Ajith time now, fans celebrate each other’s failure as victory. But you can ignore their acts because they are more attached to their heroes than anything else, as they are in no way aware about how much efforts, time, money and hardships were put in to make a film.

To our dismay this culture has now penetrated into the film makers now, is more dangerous trend to be done away with forthwith, else the devils in us will have a major say in all our acts. Film makers are like teachers who not exactly teach a subject, but showcase amply the nuances of certain acts, in their films. If they start indulging in such indecent and unethical acts, which they have showcased in their film, it hurts more.

Recently All in All Azhagu Raja a film released for Diwali met with failure at the BO. The next day people (read film makers) who are against the makers of AAAR celebrated it by hosting a party. You can understand the acts of ignorant, but not appreciate the wilful intent. It was reported that the director of AAAR too participated in the celebrations, is further more disgusting!

Are we to set an example or otherwise………..?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படுத்துகிட்டே பேசலாம் வாங்க! – அட… இவங்கள்லாம் கலைஞர்கள்தானா?

‘நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னாலும் சொன்னார். அப்போதிலிருந்தே இந்த ‘படுத்துக்கொண்டே...’ கான்சப்டை விடாமல் பிடித்துக் கொண்டது கோடம்பாக்கம். ‘எங்க தியேட்டருக்கு வாங்க....

Close