அழைத்தார் ருஷி, ஆம் என்றார் ரஜினி! -இது 32 வருஷத்துக்கப்புறமாம்….

ரஜினியின் ஜாதகம் தெரிந்தவர்களுக்கு ராஜ்பகதுரை தெரியாமல் இருக்க முடியாது. இப்போதிருக்கும் அல்லு சில்லு ஹீரோக்களின் ஆர்ப்பாட்ட பிரண்ட்ஸ் வட்டாரங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே நண்பன் என்றால் அது ராஜ்பகதுர் தான். ஏன்?

ரஜினியின் இடம் எப்படி இருக்கிறது இங்கே (ஒரு ஆச்சர்யத்தோடு இதை வாசிக்கவும்) ஆனால் ரஜினி படப்பிடிப்பிற்கு ராஜ்பகதுர் வந்தால் அவர் வருகை எலி வந்துச்சா, புலி வந்துச்சான்னே தெரியாமல் இருக்குமாம். வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்து போய்விடுவது அவரது வழக்கம். சென்னைக்கு ரஜினியை சந்திக்க வரும்போதெல்லாம் தானுன்டு தன் சிங்கிள் பெட்ரூம் ரூம் உண்டு என்று கமுக்கமாக ரூம் எடுத்து தங்கி மீட் பண்ணிவிட்டு போகிற மனிதர் அவர். (ஏது? ரஜினியை விட எளிமையான ஆளா இருப்பாரு போலிருக்கே என்பவர்களுக்கு, ஆமாம்… ஆமாம்… ஆமாம்! )

அப்படிப்பட்ட ராஜ்பகதுரை ரஜினியுடன் இணைத்து நடித்து வைத்துவிட வேண்டும் என்று தமிழ்ப்பட இயக்குனர்கள் பலர் விரும்பியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மறுத்து வந்தவர், இப்போது ஒரு படத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறாராம். இந்த ஒரு படத்திற்கும் ஏகப்பட்ட அந்தஸ்து இருக்கிறது.

1981 ல் கர்ஜனா என்ற நேரடி கன்னட படத்தில் நடித்தார் ரஜினி. அதற்கப்புறம் எந்தவொரு கன்னட படத்திலும் நேரடியாக நடித்ததில்லை. (ஆமாங்களா பிலிம்நியூஸ் ஆனந்தன் சார்?) சுமார் 32 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு நேரடி கன்னட படத்தில் நடிக்கப் போகிறாராம் அவர். கன்னட இயக்குனர் ருஷி என்பவர் இயக்கும் ஒன்வே என்ற படத்தில்தான் இந்த கோலாகலம்.

இதே படத்தில் ரஜினியுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கப் போகிறார் ராஜ்பகதுர். இருவருமே இப்படத்தில் நடிக்கப் போவது கெஸ்ட் ரோலில்தானாம். அப்படியே தமிழ்ல ரிலீஸ் பண்ணுவாங்கல்ல?

Rajini to perform cameo in Kannada film

After over 3 decades Super star Rajinikanth will appear in a cameo in a Kannada film. The film titled Oneway, will be directed by Rushi. The film is a milestone of sorts for director Rushi. Because, he has not only roped in Rajni, for the film, but also his close friend as well. Yes, Rajini will be sharing the screen presence with his close friend Raj Bahadhur, from Bengaluru. Raj Bahadhur and Rajini are ‘friends’ even before Rajini became a star. The friendship continues till date without many knowing it. Whenever he visits Chennai to see his friend, Raj Bahadhur stays in a single room in a not famous hotel. He would visit Rajini in the sets without anyone knowing about it, and leaves without a trace. Many directors from Kollywood had tried to cast both in a film, but Raj Bahadhur firmly resisted the temptation. However he has given the nod to act with Rajini in this film. Both Rajini and Raj Bahadhur appear in guest roles in the film.

Read previous post:
பாருக்கு வந்த பாவப்பட்ட நடிகை

நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், இன்றைய தேதிக்கு சுமார் எட்டு லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஹீரோயின் அவர். பெயரை சொன்னா சரியா இருக்காது. வேணும்னா ஒரு க்ளு....

Close