அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு மாறுகிறார் ராஜா!

திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசைஞானி இளையராஜா, உடல் நலம் தேற வேண்டி உலகத்தில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் பிரார்த்தனைகள் நடக்க, ஆட்டோமேடிக்காக தெம்பாகிவிட்டார் ராஜா. இன்று காலை நிலவரப்படி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்தி என்ன?

அவர் பூரண நலம் பெற்றுவிட்டார். இருந்தாலும் ஓய்வு தேவைப்படுகிறது. யாரும் அவரை பார்க்க வர வேண்டாம். வந்தாலும் அவசர சிகிச்சை பிரிவிலிருக்கும் அவரை சந்திக்க வேண்டாம் என்பதுதான். (இருந்தாலும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டும் உள்ளே சென்று ராஜாவை சந்தித்து பேசிவிட்டு வந்தாராம்) இன்று பிற்பகல் அவர் வார்டுக்கு மாற்றப்படுவார் என்பதும் மருத்துவமனை தரும் இனிமையான செய்தி.

இதற்கிடையில் சிங்கப்பூரில் நடைபெறும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி குறித்த தேதியில் நடைபெறுமா என்ற கவலையும் சூழ்ந்துள்ளது. இன்று சென்னை வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருத்துவ குழுவினருடனும், இசைஞானியுடனும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆனால் குறித்த தேதியில் நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்று இளையராஜா நம்பிக்கை தெரிவிப்பதாக அவரது தரப்பிலிருந்து செய்திகள் கசிகிறது.

Ilayaraja’s condition improvised

Isaignani Ilayaraja who was admitted in Apollo Hospital yesterday following a mild heart attack is on the path of recovery. According to sources from the hospital, his condition has improved a lot and he has been advised rest for few more days. Visitors are requested not to visit the musician for now as he needs rest says hospital statement. Earlier singer SP Balasubramaniam visited Ilayaraja and enquired about his health and wished him speedy recovery. Ilayaraja is likely to be shifted from ICU to private ward today afternoon.

Meanwhile the organizers of the live music show of Ilayaraja from Singapore would be meeting the doctors and the Maestro himself, in the evening, to find out if it would be possible to conduct the show as planned at Singapore. Sources say Ilayaraja wanted to go ahead with the music show.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘சாமி கும்பிட போனா கூட சர்ச்சையாக்குறானுங்களே…’ விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

சாமி கும்பிட போனா கூட சர்ச்சையாக்குறானுங்களே... என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபலம்ஸ்களின் பிராப்ளம்ஸ் என்று பேச ஆரம்பித்தால், பொது இடங்களில் சிக்கிக் கொள்வதை போன்ற...

Close