அவம் படத்திற்காக குரல் கொடுத்த கமல்
விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” பத்ம்பூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது. உலகநாயகன் வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின் வாயிலாக பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மதன் கார்க்கியின் கருத்துமிக்க வரிகள் இன்றை இளையதலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.
படத்தின் கதை கரு:
சாதாரண வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கும் கார்த்திக், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். அவனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை சந்தித்ததும், அந்த பெண்ணால் அவன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பங்கள், அந்த சம்பவத்தால் நிகமும் நிகழ்வுகளே படத்தின் கதை கரு. பல புதுமுகங்களுடன் அனுபவமான நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில், கௌரவ் நாயகனாக நடிக்க, கன்னடநாட்டை சேர்ந்த காவ்யா ஷேட்டி நாயகியாக நடிக்கிறார். விவேக் லெஸ்தர் உத்துப் படத்தில் வில்லனாக நடிக்க, கார்த்திக் வில்வாகிரிஷ், காஜல் வசிஷ்ட், எம்.எஸ்.பாஸ்கர், அனுபமா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அவம் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – விஜய் வில்வாகிருஷ்
ஒளிப்பதிவு – குகன் எஸ் பழனி
இசை – சுந்தரமூர்த்தி
பாடலாசிரியர் – கார்க்கி
படத்தொகுப்பு – ஆதியப்பன் சிவா
கலை இயக்குனர் – அயனா ஜெயகாந்த்
தயாரிப்பு நிர்வாகி – அனிதா வில்வாகிருஷ்
PRO – நிகில்