‘அவரும்’ வந்திருந்தாரா? அது தெரிஞ்சா நல்லாயிருக்கும்.
ஐயோ பாவம் ஹன்சிகா. எந்நேரமும் சிரித்த முகத்தோடு வலம் வந்த அவரை அழ வைத்துவிட்டார் அவரது பாட்டி. இந்த பேத்தி செல்லத்தை பெரும்பாலான நேரங்களில் மிஸ் பண்ணி வந்த அந்த பாட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பேச்சையும் மூச்சையும் நிறுத்திக் கொண்டார். வழக்கம்போலவே படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றி வரும் ஹன்சிகாவுக்கு விஷயம் சொல்லப்பட, பேரதிர்ச்சிக்குள்ளானாராம் அவர். உடனடியாக படப்பிடிப்புகளை கேன்சல் செய்துவிட்டு பறந்து போய்விட்டார். என்னதான் இருந்தாலும் துக்கம் சில நாட்களுக்கு மட்டும்தானே? மீண்டும் பரபரப்பாக வந்துவிட்டாராம் படப்பிடிப்புக்கு. வேணும்னா இன்னும் நாலு நாள் கூட டைம் எடுத்துக்குங்க. அவசரம் இல்லை என்று நாகரீகம் கருதி கூறிய படப்பிடிப்புக் குழுவினரை ஹன்சிகாவின் சின்சியாரிடி பிரமிக்க வைத்திருக்கிறது. இரண்டே நாட்களில் சகஜ நிலைமைக்கு திரும்பிவிட்டாராம் அவர். பாட்டியோட மறைவுக்கு ‘அவரும்’ வந்திருந்தாரா? அது தெரிஞ்சா நல்லாயிருக்கும்.