அவரு துப்பாக்கி வச்சுருக்காரு… நீதுவின் பேச்சால் வந்த ஏச்சு

‘ஆதிபகவன்’ பட நாயகி நீது சந்திராவுக்கு தமிழ்நாட்டில் ஒரு ஸ்டிராங் சப்போர்ட் இருக்கிறது. அப்படிப்பட்ட சப்போட்டரால் கூட அவருக்கு வந்த சமீபத்திய பஞ்சாயத்து ஒன்றை தீர்க்க முடியவில்லையாம். காரணம் நீவுக்கு நேர்ந்தது தமிழ்ப்பட தகராறு அல்ல. தெலுங்கு பட திட்டு. பொதுவாகவே தெலுங்கு பட ஹீரோக்கள் மட்டன் சாப்பிட்டு விட்டு பல் குத்துவதற்கு கூட பிஸ்டல் முனையைதான் பயன்படுத்துகிறார்கள். ஆ… ஊ… என்றால் துப்பாக்கியை துக்கிவிடுவதால், அங்கு ஹீரோயின்களின் நடமாட்டம் சற்று திகிலோடுதான் இருந்து வருகிறது.

கம்பி வேலியிலேயும் நுழையணும். முதுகுல கீறல் விழாமலும் தப்பிக்கணும் என்கிற சித்தாந்தப்படியே வாழ்ந்து வரும் பெரும்பாலான ஹீரோயின்களுக்கு மத்தியில், நாவடக்கம் இல்லாமல் போனதால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாராம் நீது. அண்மையில் ‘இதுதாண்டா போலீஸ்’ ராஜசேகர் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போனார் நீது. ஸ்பாட்டுக்கு வந்த ராஜசேகர், தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு, இவரிடம் நலம் விசாரிக்க…. பொண்ணு மனசுல டின்னு கட்டிடுச்சு.

மறுநாள் ட்விட்டரில் ராஜசேகரின் துப்பாக்கி தரிசனத்தை எழுதிவிட்டார். அவ்வளவுதான்… பொங்கியெழுந்த ராஜசேகர் போனிலேயே வறுத்துவிட்டாராம் நீதுவை. அப்படியொரு வர்ணனையை தன் வாழ்நாளில் கேட்டிராத நீது, போட்ட வேகத்திலேயே அந்த ட்விட்டை நீக்கிவிட்டார். மனிசில் ஏற்பட்ட ரணவேதனை நாலு ரவுண்டு வாக்கிங் போனாலும் தீரவில்லையாம் அவருக்கு.

Neetu Chandra’s tweet landed her in trouble!

Neetu Chandra who played one of the lead role in Theeratha Vilaiyattu Pillai and Aadhi Bhagavan, recently received ire from her co-star Rajasekar.

Neetu Chandra was to play the lead opposite to Dr.Rajasekar of Idhu Thanda Police, and was waiting for him in the sets. When he came, he placed his pistol on the table, and started enquiring about the welfare of the actress. Neetu made it a big issue in one of tweet saying Tollywood heroes are coming to shoot with their rifle in place.

On learning her tweet, enraged Rajasekar called her over phone and reportedly blasted her for her tweet. Shaken Neetu immediately removed the tweet from her page. The actress felt sorry for the incident as she is uncertain of her opportunities in Tollywood in future.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
akkshita stills

[nggallery id=307]

Close