ஆசையாயிருக்கு… ஆனா முடியலையே? லட்சுமிமேனனின் கவலை

குடும்ப குத்துவிளக்காக எரிந்தது இரு விளக்கு. அதில் ஒரு விளக்கில் இப்போது திரி அவுட். மற்றொரு விளக்கான லட்சுமிமேனன்தான் இப்போது பள பள… (அவுட்டான விளக்கு எது என்பதை கமிஷனர் ஆபிசின் பிரஸ் ரூம் சொல்லும்) அது போகட்டும்… இருக்கிற அந்த ஒரு விளக்குக்குதான் இப்போது ஓவர் அழைப்பாம். வரிசையாக படங்களை ஒப்புக் கொள்கிற நிலைமையில் நான் இல்லை. படிக்கப் போகணும்… ஆத்தா வையும் என்று கூறியே பல படங்களை தட்டிக்கழித்த லட்சுமி மேனன் இந்த ஒரு படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறாராம்.

அப்படி லட்சுமிமேனனே ஆசைப்படுகிற அந்த டைரக்டர் யார்? அழகிய தீயே, மொழி போன்ற அருமையான படங்களை எடுத்து தமிழ்சினிமாவுக்கு மேலும் மேலும் மரியாதையை குவித்த ராதாமோகன்தான் அவர்.

இவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க லட்சுமிமேனனை அழைத்தாராம். யார் கால்ஷீட் கேட்டாலும், ஒரு குறிப்பிட்ட வெல் விஷரிடம் கலந்தாலோசிக்காமல் படங்களை ஒப்புக் கொள்வதில்லை லட்சுமிமேனன். இந்த தடவை அவரே ‘நடியேம்மா’ன்னு சொல்லிவிட்டார். அப்படியிருந்தும், ‘படிக்கணுமே..’ என்று பதில் வருகிறதாம் லட்சுமிமேனனிடமிருந்து. படிப்பா, நடிப்பா என்ற குழப்பத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் லட்சுமி.

புத்தகப் பையை ஆணியிலேர்ந்து கழட்டுனாதான் அதில் வெற்றி பதக்கங்களை மாட்ட முடியும். இதுவா, அதுவான்னு லட்சுமிமேனன் முடிவு பண்ற நேரம் வந்தாச்சு…

Lakshmi Menon in dilemma about her career and studies

Kumki girl, Lakshmi Menon is enjoying her stardom, as the offers coming into her doorsteps from Tamil and Malayalam industry. But she is in a fix now. Whether to continue focussing on her career or to concentrate on studies while at the same time do films in between. She is a confused person now, as she received an offer which no heroine would refuse. Yes, the offer has come from the director Radha Mohan, who has given memorable films including Mozhi, to us. Though her care-taker says to sign the film on dotted lines, she is hesitant, thinking about her studies. It is time, she decides on the issue, once and for all, so that whatever decision she takes her focus would be on it.

1 Comment
  1. kumar@kumaresh guru says

    actually i am pts-assistant kumar, pls read my feed bak in ur fb inbox..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘விண்டோ சீட்’ வேணும்னா எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு ஓடுங்க…

விண்டோ சீட் என்பது, சைட் அடிப்பவர்களும் அடிக்கப்படுகிறவர்களும் மட்டுமே அடையக் கூடிய ஆனந்தம். கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் கதை என்னவோ தெரியாது. ஆனால்...

Close