ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி? பலியாகும் பாடலாசிரியர்கள்…
ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி பற்றி அறம் பாடாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது சினிமா பாடலாசிரியர்கள். இவர்கள் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அவர்களுக்கோ, அவர்களது குடும்பங்களுக்கோ போய் சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால் முன்னணி ஆடியோ நிறுவனங்கள் இப்போது புதிதாக ஒரு நிபந்தனை விதிக்கிறார்களாம். இந்த பாடல்களுக்கு அவர்கள் எப்போது கை நீட்டி சம்பளம் வாங்கினார்களோ, அதோடு அந்த பாடல்களுக்கும் அவர்களுக்குமான சம்பந்தம் போச்சு. இனிமேல் அவர்கள் அந்த வரிகளுக்கு உறவு கொண்டாட முடியாது. அது எங்களுக்கே சொந்தம் என்கிறார்களாம்.
பாடலை வாங்கும்போதே தயாரிப்பாளர்களை நிர்பந்தம் செய்து இப்படியொரு அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்க நினைக்கும் இவர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு போராட தயாராகி வருகிறார்கள் பாடலாசிரியர்கள். வேதனை என்னவென்றால், நா.முத்துகுமாரோ, யுகபாரதியோ, தாமரையோ இன்னும் இவர்களை போல சினிமா பாடலாசிரியர்களோ, யாராக இருந்தாலும் தாங்கள் எழுதிய சினிமா பாடல்களை தனி புத்தமாக வெளியிட்டு விற்க நினைத்தால் கூட, அதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமாம்.
சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கே சொத்து பத்தெல்லாம் எழுதிக்கொடுத்துடுங்கிற மாதிரியில்ல இருக்கு இந்த பிரச்சனை? சீக்கிரம் பிரச்சனைக்கு முடிவு கட்டி கவிஞருங்க மனசை காப்பாத்துங்க சங்கங்களே….!
(லேட்டஸ்ட் தகவல், சம்பந்தப்பட்ட ஆடியோ கம்பெனிகளிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கப் போகிறது. ஒரு நம்பர் லாட்டரி சீட் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் கவிஞர்கள். நாட்டாமை… தீர்ப்பை சரியா சொல்லுங்க)
Lyricists raise revolt against royalty agreement
Earlier Lyricists used to get royalty for their songs whenever they are put into use for any other purpose other than in the film for which they had written the song. Now the leading audio companies insists on a clause in the agreement with lyricists that they cannot claim any royalty in future once they receive the payment writing the songs, as they become property of the audio company. The producers have no other go but to scrupulously follow the diktat of these audio companies. The lyricists have raised a revolt of protest against the clause and have appealed to producers’ council to look into the matter and solve the issue once and for all. It is reliably learnt that current President Kayaar will be holding talks with parties concerned for an amicable settlement.