ஆடியோ விழாவில் அவமானப்படுத்தப் பட்டாரா சூர்யா?

 

 

e

சபை ஒழுங்கு (புரோட்டோகால்) என்பது அரசு விழாக்களுக்கு மட்டுமல்ல, சினிமா விழாக்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய ராதாரவி, ‘அமெரிக்காவில் நடைபெறும் விழாக்களில் பெரிய அந்தஸ்தில் இருக்கிற பிரபலங்களை முதலில் பேச வைப்பாங்க. கடைசியில் பேசுற ஆள்தான் சின்ன ஸ்டேட்டஸ்ல இருக்காருன்னு அர்த்தம். நம்ம ஊர்லதான் கடைசியா பேசுற ஆள் பெரிய மனுஷன்னு அர்த்தம்’ என்றார். உட்காரும் சீட்டிலிருந்து பேசுகிற நபர்களின் வரிசை கிரமம் வரைக்கும் இங்கே ஸ்டேட்டஸ்தான் தீர்மானிக்கிறது.

இன்று காலை நடந்த மாலினி 22 பாளையங்கோட்டை பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யா அமர வைக்கப்பட்ட இடம் பார்வையாளர்களின் கண்களை சற்றே உறுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும். மேடையில் அமர வைக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை காணும் வாய்ப்பு கிடைப்பவர்கள் கண்களில் சற்று விளக்கெண்ணை விட்டு கவனித்தால்தான் தெரியும் என்பதில்லை. சாதாரணமாக பார்த்தாலே சட்டென புலப்படும் அந்த உறுத்தல்.

சற்று தாமதமாக வந்து கொண்டிருந்த கமலுக்கு நடுநாயகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கமலுக்கு இடது புற சீட்டில் அமர வைக்கப்பட்டார் விஜய் சேதுபதி. கமலுக்கு வலது புறத்தில் பாலசந்தருக்கு இடம். இரண்டு சீட் தள்ளி மார்க்கெட்டில் கமலுக்கு அடுத்த இடத்திலிருக்கும் சூர்யா அமர வைக்கப்பட்டார். நியாயமாக கமலுக்கு வலது புறத்தில் பாலசந்தரும், இடது புறத்தில் சூர்யாவும் அல்லவா அமர்ந்திருக்க வேண்டும்? இந்த முறையற்ற ஒழுங்கை ஸ்ரீப்ரியா கவனிக்காமல் விட்டதெப்படி?

சூர்யாவின் ரசிகர்கள் சற்று கொந்தளிப்போடு புலம்பியபடியே கலைந்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் டென்ஷன் ஆகிற இடத்திலா இருக்கிறார் சூர்யா?

Suriya not given enough importance during audio launch

During the audio launch of Malini 22 Palayamkottai, the minimum courtesy for a senior artiste was overlooked, hopefully by oversight and not intentional. Kamal was provided the centre seating arrangement, while K Balachandar occupied his right hand side, his left hand seating was given to Vijay Sethupathi. Suriya was given 2 seats away from Kamal, literally throwing away the protocol to be given to a senior artiste. Suriya should have been provided the seating next only to Kamal. We wonder how Sri Priya overlooked this error! Thanks to Suriya, he has taken it very sportingly, we suppose.

1 Comment
  1. Vijay says

    Vijay Sethupathy was sitting right to Kamalhassan , not left… Kamalhassan’s left is KB…

    Suriya was given proper seating arrangement only, he was sitting next to director Sripriya…

    அவமானம் என்று எடுத்துக் கொண்டால், விஜய் சேதுபதிக்குக் கிடைத்த கைதட்டல்கள் அவருக்குக் கிடைக்காமல் போனதுதான்… ஆனால், உண்மையில் இந்த மேடையில் தான் சூர்யா மிகவும் சென்சிபிளாகப் பேசினார்…

    மேலும், கமல், கேபி போன்றோர் அருகில் அடிக்கடி அமர்பவர் தானே சூர்யா… விஜய் சேதுபதி வளரும் நாயகன், மேலும் சரத்குமாருக்குப் பதிலாக டிரையலை வாங்கிக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெருக்குகிற டிராபிக்- யூனிட்டின் நிம்மதியை பறித்த ஹன்சிகா? – சென்னையில் சில பரபர நிமிடங்கள்…..

நெருக்குற டிராபிக்குல நிம்மதி பறிபோச்சே என்று ஆளாளுக்கு அலறிக் கொண்டிருக்க, இந்த சென்னை டிராபிக்ல பைக் ஓட்டினாலே ஆச்சு என்று ஒரு முன்னணியிலும் முன்னணி நடிகை பிடிவாதமாக...

Close