ஆட்டோவுல போறேன்… அப்புறம் பேசுறேன்! -டைரக்டர் பாலா
சமீபத்தில் ஒரு பேட்டிக்காக டைரக்டர் பாலாவுக்கு போன் அடித்தார் ஒரு நிருபர். ‘ஹலோ’ என்பது கூட காதில் விழாதளவுக்கு கடபுடா ஆட்டோ சப்தம். எதிர்முனையில் பேசிய பாலா, ‘நான் ஆட்டோவுல போயிட்டு இருக்கேன். நீங்க பேசுறது கேட்கல. இறங்கிட்டு கூப்பிடுறேன்’ என்றார். பந்தாவுக்காக ஃபாரின் கார்களில் பயணம் செய்யும் இயக்குனர்களுக்கு மத்தியில், பந்தாவே இல்லாத பாலாவின் ஆட்டோ பயணத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. போகட்டும்…
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வழக்கம் இல்லாதவர் பாலா. இருந்தும் ஒரு புதிய சேனலில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தீபாவளி சமயத்தில் வெளியானது நிகழ்ச்சி. இவ்வளவு அக்கறையோடு அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணம் என்ன?
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது, இவரது நட்பு வட்டாரத்தில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் சங்கீதா என்பதால்தான். இது பிதாமகன் பிரண்ட்ஷிப், வேறொன்றுமில்லை… அதே நேரத்தில் தனது படம் தொடர்பான விஷயங்களை சங்கீதாவுடன் பகிர்ந்து கொள்கிற அளவுக்கு அவரை அசிஸ்டென்ட் டைரக்டர் லெவலிலும் வைத்திருக்கிறாராம் பாலா.
பாலாவின் அசிஸ்டென்ட் என்கிற ஏகலைவத் தகுதியோடு சங்கீதாவே ஒரு படத்தை இயக்கலாம் போலிருக்கிறதே….