ஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்…..

தமிழ்சினிமா க்ளைமாக்சுகளை பிலிம் இல்லாமல் கூட எடுத்துவிடலாம். ஆனால் பின்னி மில் இல்லாமல் எடுக்கவே முடியாது. ஹீரோயினை கடத்திக் கொண்டு வந்து இங்குதான் வைப்பார்கள். வில்லன் கூட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டு பைட் மாஸ்டர்களுக்கு ‘பஞ்ச்’ மிட்டாய் கொடுத்துவிட்டு ஹீரோயினை மீட்டுக் கொண்டு போவார் ஹீரோ. தமிழ்சினிமாவில் ஆயிரத்து சொச்சமாவது தடவையாக இந்த காட்சிகள் வந்தாலும், எவ்வித தயக்கமும் இல்லாமல் இதே பாழடைந்த பின்னி மில்லுக்குதான் வருவார்கள் இயக்குனர்கள்.

இந்த பின்னி மில்லைதான் அஜீத்திற்காக ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். ஐயய்யோ… ஒருகாலத்தில் படைப்பாளிகளா? தொழிலாளர்களா? என்கிற முஷ்டி மோதலில், தொழிலாளர் பக்கம் நின்றவராச்சே அஜீத்? அவரா இப்படி என்றெல்லாம் அதிர்ச்சி அடைய தேவையில்லை. ஆமாம்… நடந்தது உண்மைதான்.

வீரம் படத்திற்காக கடந்த வாரம் இங்கே ஷுட்டிங் நடத்தப்பட்டது. இந்த யூனிட்டிற்கு பின்னி மில்லின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டார்கள். மற்ற பகுதிகளில் வேறு படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் வீரம் யூனிட், அஜீத் சாருக்கு அது தொந்தரவா இருக்கும். அதனால் வேறு யாருக்கும் ஷுட்டிங்குக்காக விடக் கூடாது என்றார்களாம். வேணும்னா அந்த காலி இடத்துக்கும் சேர்த்து நாங்க பணம் கொடுத்துடுறோம் என்று படக்குழுவினர் கூறிவிட, அவ்வளவு பெரிய மில்லுக்கும் ஒரே ஒரு ஷுட்டிங்தான் நடந்திருக்கிறது. இடம் கிடைக்காமல் தடுமாறிய வேறு சில சினிமா கம்பெனியினர், ஷுட்டிங் எடுக்கலே. பதிலாக செட் போட்டுக்குறோமே, கார்ப்பென்டர்கள் வந்து அவங்க வேலையை உங்களுக்கு தொந்தரவு இல்லாமப் பார்ப்பாங்க என்று கேட்டார்களாம்.

ஆணி அடிக்கிற சவுண்ட்ல அஜீத் சார் மூட் அவுட் ஆவாரு. வேணாம் விட்ருங்க என்று கறாராக சொல்லிவிட்டதாம் வீரம் தரப்பு. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கூலி கட். வேலையும் கட்.

கலெக்ஷன்ல யானையா இருக்கலாம். கருணையில பூனையா இருக்கீங்களே பிரதர்….

Ajith caused ‘wage loss’ to workers during Veeram shoot

Ajith who was shooting some action scenes in his upcoming film Veeram at Binny Mills, Chennai, perhaps inadvertently caused wage loss to some of the workers. It is said that Veeram makers have taken over the entire mills premises for the reason that any sound caused would make the actor lose his mood during the shoot. Hence no permission was given to those who also booked part of the premises, either to shoot or to employ workers to create sets for their film. This has caused the makers of other films loss of time, while the workers must have lost their wages. We know Ajith is a magnanimous person but it would further enhance his reputation if he shows some magnanimity to his fellow film makers and other workers too.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மவனே… காணாப் போயிடுவே! – விஜய் சேதுபதியை எச்சரித்த இயக்குனர்

தலைப்புதான் இப்படி சுடு தண்ணி. மேட்டர் என்னவோ ஜில்தான்! விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது....

Close