ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 2 ‘பங்காளி வடிவேலும்… பாசக்கார அடியேனும்…’ -தேனி கண்ணன்

நம்முடைய வாழ்க்கையில நமக்கு கிடைக்கனும்னு சில விஷயங்கள் நியமிக்கப்பட்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாமே அந்த விஷயத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் நாம் தவறவிட்ட அந்த விஷயம் வேறு வடிவத்தில் நமக்கு தெரியாமலே நம்மோடு இருக்கும். ( இப்ப எதுக்கு இந்த பில்ட்-அப்னு கேக்குறீங்களா….மேல படிங்க புரியும்.)

அன்றைக்கு சரியான மழை. காலையில் அலுவலகத்திற்கு வண்டியில் வந்து கொண்டிருந்தேன். தண்ணியும் ட்ராபிக்கும் சென்னையை நிரப்பியிருந்தது . இந்த நேரத்திலா என் செல்போன் அடிக்க வேண்டும். பொதுவாக வண்டியில் வரும் போது போனை எடுக்க மாட்டேன். ஆனால் போன் அடுத்தடுத்து ரிங் ஆகிக்கொண்டேயிருந்தது. ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு போனை எடுத்தேன். “என்ன பங்காளி எங்க இருக்கீக” எதிர் பக்கம் வடிவேலு.அண்ணன். : “மழைக்குள்ள மாட்டிகிட்டிருக்கேண்ணே’” “ சரி சாயங்காலம் ஆபீஸ் பக்கம் வர்றீகளா’”என்றார். அப்போது சிங்கமுத்துவிற்கும், அவருக்கும் தகராறு உச்சத்தில் இருந்தது. அதனால் அடிக்கடி என்னோடும் நான் அவரோடும் பேசிக்கொண்டிருந்தோம் இந்த விஷயம் தான் பேசக் கூப்பிடுறாரோன்னு “மழையா இருக்கேண்ணே.” என்றேன் “அதுக்கு தான் வரச்சொல்றேன் பங்காளி என்று ’கெக்கே பிக்கே’ன்னு சிரித்து விட்டு போனை வைத்தார். எனக்கு புரிந்து போனது இன்னைக்கு கச்சேரிதான்.

சாயங்காலம் ஆறு மணிக்கு வடிவேல் ஆபீஸில் இருந்தேன். அங்கு அவரோடு திரையில் காமடி பண்ணும் சிலர் இருந்தனர். முத்தையாண்ணனும் இருந்தார். சாயந்தரம் நேரம் அவர் ஆபீஸ்க்கு போனால் சின்ன சின்னதா மசால் வடை சூடா கிடைக்கும். இது வடிவேலுக்கு ரொம்பவும் பிடிச்ச அயிட்டம். வடை சாப்பிட்டு முடிச்சேன். அரை மணிநேரம் ஆனது. அண்ணனுக்கு போன் அடிச்சேன். “இந்தா வந்தாச்சு வந்தாச்சு.” என்றார். நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. ஆள் வந்தபாடில்லை. “என்னண்ணே இன்னும் காணோம்.” என்று முத்தையாண்ணன்கிட்டே சலிச்சுகிட்டேன். அவர் வெளியே போய் பார்த்துட்டு வந்து. “வாசல்ல கார் இருக்கு. கண்ணன் ஆனா அவர் எங்க போனார்னு தெரியலையே.” என்று அவரும் குழம்பினார். அந்த கார் வாங்கி ரெண்டு, மூணு நாள் தான் ஆகியிருந்தது என்பதையும் சொன்னார் முத்தையா. எங்க போயிருப்பார்னு ஒண்ணும் புரியல. நான் வீட்டுக்கு கிளம்பலாம்னு தயாராகிட்டேன்.

அந்த நேரம் பார்த்து உள்ள வ்ந்தார் வடிவேலு. “என்னண்ணே எங்க போனீங்க. என்னாச்சு.”னு நான் கேட்க, “அந்தக் கொடுமைய எப்படிண்ணே என் வாயால சொல்லுவேன்.. யேய் அந்த டிரைவரை கூப்புடு.” என்று சொல்ல, டிரைவர் வந்து நின்றார். அவர் முகத்தில் நக்கலான சிரிப்பு தெரிந்தது. ஆனால் அதை அவர் மறைக்க முயன்றும் முடியவில்லை அண்ணன் ஆரம்பிததார்,”ஏன்டா எத்தன நாளா காத்திருந்த, ஆள கொல்லப் பார்த்தியேடா.” என்று கச்சாமுச்சானு கத்தினார். எனக்கு ஒண்ணும் புரியல. அப்புறம் தான் விஷயத்தை சொன்னார். “பங்காளி இந்த கார் புதுசு. இறங்கிட்டு கதவை சாத்தினோம்னா லாக் ஆகிடும் உள்ளருந்து திறக்க முடியாது வெளியேயிருந்துதான் திறக்க முடியும்.இவன் என்ன பண்ணினான்னா வழக்கம் போல நான் இறங்கிட்டேன்னு நெனச்சு கதவை சாத்திட்டுப் போயிட்டான். நான் போன் பேசிகிட்டே உள்ள உட்கார்ந்துட்டேன். பேசி முடிச்ச பிறகு தான் தெரியுது. நான் மாட்டிகிட்ட விஷயம். இந்த பயலுக்கு போன் போட்டா எடுக்கவே இல்ல..ஏண்டா என்னை பார்த்தா எப்படி தெரியுது.” என்று விளக்க எனக்கு சிரிப்பை அடக்க முடியல. வந்து நின்ற டிரைவரும் சிரித்து விட, “ஏண்டா நான் சீரியஸா பேசிகிட்டிருக்கேன் நீ சிரிச்சுகிட்டிருக்க.” என்று கோபபப்பட டிரைவரோ “அப்ப காலைல வர்றேன்” என்று எஸ்கேப் ஆனார். “பார்த்தீங்களா பங்காளி இந்த மூஞ்சிய பார்த்தா சிரிக்கிறாய்ங்களே தவிர சீரியஸா பார்க்க மாட்டேங்கிறாய்ங்க..” என்று சொல்லி விட்டு எல்லோறயும் அனுப்பி விட்டு ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தோம்.

ஆனால் நேரம் ஆகிவிட்டதால் எனக்கு வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்து கொண்டேயிருந்தது. சட்டென்று என்கிட்டேயிருந்து போனை வாங்கிய வடிவேல் என் மனைவியிடம் பேசினார். ,”தங்கச்சி நான் வடிவேலு பேசுறேம்மா. நல்லாயிருகீகளா, மாப்ள எப்புடி இருக்கான். அண்ணனும் நானும் பேசிகிட்டிருக்கோம் சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன் தங்கச்சி.” என்று போனை என்கிட்டே கொடுக்க, என் மனைவி நம்ப முடியாமல் “ஏங்க வடிவேல் சாரா பேசுனாரு.” என்று பரவசப்பட்டார். இதுதான் சாக்கு என்று நானும் “முக்கியமான விஷயம் பேசுறோம் வர லேட்டாகும்”னு சொல்லி போனை வெச்சுட்டேன். இது மாதிரியான தருணங்களில் ஒரு கலைஞனோடு தனிமையில் பேசிக் கொண்டே இருப்பது முக்கியமான விஷயம். அதுவும் நாட்டுக்கே சிரிப்பு வைத்தியம் பார்க்கும் வடிவேலுவுடன் இருந்தால் எப்படியிருக்கும் பாருங்கள். படம் ரிலீஸாவதர்கு முன்னவே அந்த படத்தின் காமடி காட்சியை நடித்துக் காண்பிப்பார். சிரிப்பதற்கு ஒரு வாய் பத்தாது.. அவர் சந்தோஷமா இருந்தாலும், சோகமாக இருந்தாலும் பாடுற ஒரே பாட்டு ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்…’என்ற பாட்டுதான்.

“அண்ணே இதே ஏரியவில ஒரு சினிமா கம்பெனியில ஒரு மூலைல முடங்கிக் கிடப்பேன். அங்க ராவு பூராம் டைரக்டருங்க வந்து போயிகிட்டே இருப்பாங்க. தூங்கவே முடியாது. அவங்களுக்கு நடுச்சாமத்துல எழுந்து டீ வாங்க நூறடி ரோட்டுக்கு நடந்தே வருவேன். சில நாள் காலைல நாலு மணிக்குதான் தூங்க போவேன். அடுத்த குரூப்பு வந்ததுருவாய்ங்க. அப்பறம் எங்க தூங்கறது. இப்படியே பல நாள் போயிரும்ண்ணே.” என்று சொல்லிவிட்டு, “பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.. உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை” அவர் பாடி முடித்த போது கண்ணில் கண்ணீரோடு என்னையும் கலங்க வைத்தார்.

மணி நள்ளிரவு 1 மணியாகியிருந்தது. “நான் வீட்டுக்கு கிளம்புறேண்ணே..” ”இந்நேரத்துக்கு எப்படி வண்டியில போவீங்க .வண்டிய ஆபீஸ்ல போடுங்க. டேய்.. காரை எடுப்பா அண்ணனை வீட்ல கொண்டு விட்டுட்டு வருவோம்.” என்று காரை எடுத்துக் கொண்டு என் வீடு இருக்கும் பல்லாவரத்திற்கு வந்து இறக்கி விட்டு திரும்பினார் பாசத்திற்குரிய பங்காளி. மறுநாள் ’வடிவேல் வாசல் வரைக்கும் வந்தார்’ என்று சொன்னால் என் மனைவி நம்பவே இல்லை.

சமீபத்தில் ஒருநாள் அவருக்கு போன் பண்ணினேன். “ஹலோ ஹலோ” என்றாரே தவிர பேசவில்லை. சிறிது நேரத்தில் மேனேஜர் முத்தையாண்ணன் பேசினார்.”கண்ணன் குற்றாலத்தில் இருக்கார். சரியா சிக்னல் எடுக்கலையாம் உங்க கிட்ட சொல்லச்சொன்னார்.” என்றார். அந்த வார இதழிலிருந்து விலகியிருக்கும் இந்த நேரத்தில் போனை எடுக்காமலிருந்தால் தவறாக நினைத்து விடலாம் என்று நினைத்து அக்கறையோடு முத்தையாவை பேச வைத்தது தான் பங்காளி பாசம்.. ( இனி முதல் பாராவில் நான் கொடுத்த பில்ட்-அப்பிற்கு விளக்கம் ).

சில வருடங்களுக்கு முன்பு வீட்டில் என் உறவினர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த ஜாதகங்களில் வடிவேல் உறவினரின் ஜாதகமும் ஒன்று. என்ன காரணத்திலோ அந்த வரன் அமையாமல் போனது. ஆனால் அன்று தவற விட்ட உறவு இன்று வடிவேலு அவர்களின் மூலம் நட்பாக உருமாறி திரும்ப வந்திருக்கிறது. இந்த உன்னதமான கலைஞனின் உறவையும், நட்பையும் போற்றுவதே பங்காளிக்கு நான் செய்யும் பதில் மரியாதை.

(இன்னும் மீட்டுவேன்)

தேனி கண்ணனின் தொலைபேசி எண் – 09962915216

The other side of Vadivelu, a genuine human – Theni Kannan

Theni Kannan has narrated an incident which has brought the genuine human in Vadivelu which many of us may not be aware of. Vadivelu though subdued now, never forget to bring smiles on the face of people. His friendship is spontaneous and with lot of anecdotes. Theni Kannan was once requested by Vadivelu to meet him at his office in the evening. Despite the downpour he managed to reach office in time, but Vadivelu was not there. His manager Muthiah too was puzzled since his car was there but Vadivelu was missing. After a very long while when Kannan was about to leave for home, Vadivelu came rushing in. It so happened that Vadivelu got locked inside the car as the innocent driver thought his boss got out of the car. The car does not have internal opening system thereby Vadivelu spent hours inside and managed to get the driver and came out. He narrated the incident to everyone in his own inimitable style thus the atmosphere become conducive from one of seriousness and anger. Later Kannan and Vadivelu went on to discuss other matters with Kannan’s wife disturbing their talks intermittently. Vadivelu took the phone spoke to Kannan’s wife enquiring about the welfare and requested her to wait as Kannan was with him talking to him. It was one a.m., when their discussed got over, and Vadivelu himself dropped Kannan at his home at Pallavaram, at the amazement of Kannan’s wife. Such is the spontaneity of friendship by Vadivelu. Well! How Kannan got into this kind of closeness with the ace comedian? Sometime ago, there was a marriage alliance in his family with that of Vadivelu’s relative’s family, which did not materialse. But though it did not happen, Kannan got a fruitful friendship Vadivelu, who calls Kannan as ‘Pangali’.

Read previous post:
கனடாவை கலக்கிய ‘A Gun and a Ring’ – ரஜினி படத்தை விட இதற்குதான் கூட்டமாம்…

நம்மை போன்ற உள்ளூர் தமிழர்களுக்கு இப்படத்தை காணும் பாக்கியம் வாய்க்குமா தெரியாது. ஆனால் கனடிய தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. படத்தின்...

Close