ஆன்ட்ரியா பாட்டை நான் அப்பவே கேட்டுட்டேன் -கமல் பேச்சு

ஆன்ட்ரியா முணுமுணுத்தாலே அதை சங்கீதம் என்று கொண்டாடிவிடுகிற தாராள மனசிலிருக்கிறான் தமிழன். அவனுக்காக ஒரு பாடலையே அர்ப்பணித்திருக்கிறார் அவர். உச்சி குளிர்ந்து உதடெல்லாம் ஈரமாகி அதை ரசிக்க வைத்தார்கள் நேற்று. ‘தரமணி’ என்கிற படத்தை தற்போது இயக்கி வருகிறார் தங்க மீன்கள் ராம். ‘இந்தியாவின் வரைபடத்தில் ஒரு பகுதியாக இருந்து, அமெரிக்கா வரைபடத்தின் ஒரு பகுதியாகிவிட்ட தரமணியின் கதை இது’ என்றார் தனக்கேயுரிய கவிதையும் பொழிப்புரையுமான தமிழில்.

இந்த பாடலை வெளியிட வந்திருந்த கமலும் பாரதிராஜாவும் இவர் பேச்சை ஒருவித ரசனை கண்களோடு கவனித்துக் கொண்டிருக்க, தரமணி பற்றி இன்னும் இன்னும் என்று கவிதையை நீட்டிக் கொண்டே போனார் ராம். ‘எல்லாரும் பாரதிராஜாவை அப்பான்னு கூப்பிடுவாங்க. எனக்கொரு நல்ல அப்பா இருப்பதால் அவரை நான் அண்ணன்னுதான் கூப்பிடுவேன். இப்போது அண்ணன் பாரதிராஜா பேசுவார் ’ என்று மைக்கை அவரிடம் கொடுத்தார் ராம். (நல்லா நாலு பேருக்கு புரியற மாதிரி சொன்னீங்க… வெல்டன் ராம்)

பாரதிராஜா பேச்சை விடுங்கள். ஆன்ட்ரியாவின் பாட்டு எப்படி? தமிழ் தெரிந்த நடிகை ஆன்ட்ரியா. தமிழ்ல எழுதுவார். தமிழ்ல பேசுவார் என்றெல்லாம் ராம் கொடுத்த பில்டப்பெல்லாம் படீர் என்று உடைந்தது. ஸிங் இன் த ரெயின்… என்று வடிவேலு ஒரு படத்தில் பாடுவாரே, அந்த டைப் இங்கிலீஸ் பாட்டுதான் அது. ஆனால் அதை படமாக்கியிருந்த விதத்தில் பாடலையும் மீறிய மயக்கம் இருந்தது. தேனி ஈஸ்வர்தான் கேமிரா. இவர் ஏற்கனவே அழகர்சாமியின் குதிரை படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிவிட்டார். அந்த வரலாறெல்லாம் தெரிந்து கொள்ளாமல், ‘இந்த படத்தில் தேனி ஈஸ்வரை அறிமுகப்படுத்திய ராமிற்கு ஹாட்ஸ் ஆஃப் டூ யூ’ என்ற பாரதிராஜாவின் பேச்சு, வெத்தல சிரிச்சா போச்சு ரகம்!

இந்த பாடல்களை நான் இப்பதான் கேட்கிறேன்னு சொல்ல மாட்டேன். ஆன்ட்ரியா நல்ல பாடகின்னு எனக்கு ஏற்கனவே தெரியும். விஸ்வரூபம் படப்பிடிப்பில் பலமுறை இந்த பாடல்களை நான் கேட்டிருக்கேன் என்றார் கமல்.

Andrea single track in Taramani released by Kamal

Director Ram is directing Taramani, after his successful outing with Thanga Meenkal. As the name suggests, the film is about the love life of those who work in the IT industry. The film is produced by JSK Corporation, which has Yuvan Shankar Raja scoring the music.

A single track of the film sung by Andrea was released by the Chief Guest Kamal Hassan and director Bharathiraja. The song was screened to the audience which has been appreciated by all. It is an English number captured elegantly by Cameraman Theni Ishwar who debuted with Azhagar Samiyin Kudhirai.

Speaking on the occasion Kamal said that he happened to listen the song few times during the shoot of his Vishwaroopam 2, when Andrea used to sing in the sets.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘உங்களுக்கு எப்படி ஒரு ஸ்பிரிச்சுவல் வழி இருக்கோ, அது மாதிரி எனக்கும் ஒண்ணு இருக்கு’ – இளையராஜாவிடம் வாதம் செய்த யுவன்

2013 டிசம்பர் 30 ந் தேதி ‘இஸ்லாமியராகிறார் யுவன்’ என்ற தலைப்பில் நமது இணையதளத்தில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தோம். (https://www.newtamilcinema.in/2013/12/2853/) தமிழ்சினிமாவுலகத்தையும் உலகம் முழுவதும் இருக்கிற...

Close