‘ஆரம்பம்’ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ நிறுவனங்களில் வருமான வரி சோதனை!

தீபாவளி வசூல் மத்தாப்பூவாக ஜொலிக்கும் நேரம் இது. தயாரிப்பாளர்கள் சினிமாவில் இறைத்த பணத்தையெல்லாம் ரிலீஸ் நேரத்தில் வட்டியும் முதலுமாக வசூல் செய்யும் நேரம் இது. இந்த நேரத்தில்தான் இன்கம்டாக்ஸ் அதிகாரிகளின் கழுகு பார்வையும் முன்னை விட கூராக வந்து தாக்கும். இன்று அந்த கழுகின் பலமான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் பிரபல தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் ஏ.எம்.ரத்னம் இருவரும். இவர்களுடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம்தான் ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரித்து வரும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது. தற்போது ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை ஞானவேல்ராஜாவும், ஆரம்பம் படத்தை ஏ.எம்.ரத்னமும் வெளியிடுகிற வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் வரவு செலவு கணக்குகளை தோண்டியெடுக்க நுழைந்திருக்கிறது அதிகாரிகள் குழு.

கோடிகளில் புரளும் இவர்கள் அதற்குரிய எல்லா டாகுமென்ட்டுகளையும் முறையாக வைத்திருப்பார்கள். ஏனென்றால் பக்கத்து வீட்டு திண்ணையில் நடந்த பல கச்சேரிகளை இதற்கு முன்பு பார்த்தவர்கள்தானே இவர்கள்?

Income-tax raid at the premises of Arrambam and AAA producers

Gnanavel Raja of Studio Green is making last minute preparation for the grand release of his film All in All Azhagu Raja for Diwali. AM Ratham, a relaxed man now, having released his film Arrambam to a tumultuous response from audience. When they await to count the returns on their investments in these films, there comes the tragedy. The Income-tax authorities have raided their premises for a check on their accounts. Till the time we go into this story, no details about any incriminating documents have been announced.

Comedy actor Santhanam too was caught in the Income-tax net along with the above producers, as his premises too got raided.

Hope they will all be cleared in their respective accounts, so as to celebrate Diwali with famiy and enjoy the success of their films.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“உங்களாலதான் எல்லாம். பேட்டி கிடையாது போங்க…!” – சேனல்காரர்களிடம் கோபப்பட்ட விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி எந்த மேடைக்கு வந்தாலும், ‘தலைவா...’ என்று கூச்சலிட்டு கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஒரு தலைவனுக்குரிய இலக்கணத்தை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் அவரும். அப்படின்னா? ‘போங்கய்யா... என்னால முடியாது’...

Close