ஆரம்பம் ஷோ இருக்கா… அலையாய் அலையும் நடிகர் நடிகைகள்!
31 ந் தேதி அதிகாலை ஐந்து மணிக்கே ‘ஆரம்பம்’ ஷோவை ஆரம்பித்துவிடுகிறார்களாம். இந்த அதிகாலையிலும் அஜீத் படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட்டை வாங்கி குவித்துவிட்டார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜால் திரையரங்க வளாகத்தில்தான் இப்படியொரு கோலாகல கொண்டாட்டத்தை நடத்தவிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
உலகம் முழுக்க வாழும் தமிழர்களுக்கு தோதாக முன் பதிவை துவங்கிய தியேட்டர் நிர்வாகங்கள் ஸ்தம்பித்து போயிருக்கிறார்களாம். கவுண்டர் திறந்தாலும் கூட்டம், கம்ப்யூட்டர் முன் பதிவிலும் நெரிசல். ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் இப்பவே விற்று தீர்ந்துவிட்டதாம். இது ஒருபுறமிருக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா 2 ந் தேதிதானே வெளியாகிறது? அந்த தியேட்டர்களிலும் ஆரம்பம் படத்தை போட முடிவு செய்துவிட்டார்களாம் தியேட்டர்காரர்கள். ஒரு தியேட்டர் காம்ப்ளக்சில் எத்தனை தியேட்டர் இருக்கிறதோ, அத்தனையிலும் ஆரம்பம் ஷோதான் என்று அதிர்ஷ்ட ரேகைக்கு ஆயில் தடவி சந்தோஷப்படுகிறது தியேட்டர் வட்டாரம்.
சினிமாவுக்கு வெளியே ரசிகர்களின் உற்சாகம் இப்படியிருக்க, சினிமாவுக்குள்ளேயே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்காக ஒரு ஷோ நாளை இரவு சத்யம் காம்பளக்சில் இருப்பதாக இப்பவே தகவல் கசிகிறது. நான் நீ என்று நடிகர் நடிகைகளே இந்த ஷோவுக்கு அடித்துக் கொள்கிறார்களாம்.
சம்பந்தப்பட்ட அஜீத் மட்டும் சென்னையிலேயே இல்ல…. அட போங்கப்பா!
All roads lead to Arrambam theatres in Chennai
The City of Chennai is preparing a big show-down on 31st with multiplexes and single screens vying with each other to make the release of Ajith’s Arrambam, a phenomenon. In this Thala fans are not lagging behind and preparing themselves for a big extravaganza on the 31st Oct. Arrambam will be released from 31st morning 5 a.m. onwards and tickets have been sold out, for these shows. Advance booking is already full for the first week. There is a heavy rush at both theatres as well as for online bookings. Most of the multiplexes and single screens are planning to pull out all other films to accommodate Ajith’s Arrambam for Diwali weekend. Theatres are not worried about the overkill, as the shows for the week are blocked, they are planning to put extra screens as well, if the demand grows. As we reported earlier, on the 31st Oct. and 1st Nov. there will be a minimum of 250 shows, each day, for the film. Apart from this, the distributors in overseas have made elaborate arrangements to screen as many shows possible, in US, UK and Middle East to capitalise on the hype and anticipation for the film. The distributors here point out there may be 450-500 screens in the state alone and 700+ screens in the entire South India.
There will be a special screening of Arrambam for the film fraternity at Sathyam complex, and even for this there is a heavy demand of tickets amongst the actors and actresses, as well.
Well, Ajith fans, Kollywood, and other viewers are preparing for ‘Thala’ Diwali, a grand one.